ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புDec 21, 2016

கடந்த டிசம்பர் 12ம் தேதி வர்தா புயல் சென்னை அருகே கரையைக் கடந்தது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.

siragu-weather

இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை புதியதாக உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தற்போது மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது.

இதனால் தென் தமிழகத்தில் புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் போன்ற இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு”

அதிகம் படித்தது