தெருக்களில் கழிவு நீரை திறந்துவிட்டால் அபராதம்
Jan 30, 2017
சென்னை தெருக்களில் கழிவு நீரை திறந்துவிடும் குடியிருப்புவாசிகளுக்கு அபராதம் விதிக்க வழிவகை செய்யும் சட்டமுன் வடிவு இன்று(30.01.2017)நடைபெற்ற தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
இச்சட்ட முன்வரைவை தாக்கல் செய்த உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, சென்னை தெருக்களில் கழிவு நீரை திறந்து விடும் குடியிருப்பு வாசிகளுக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
அதேபோல் வணிக வளாகங்கள் கழிவு நீரை திறந்து விட்டால் பத்தாயிரம் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று இந்த சட்ட முன்வரைவில் கூறப்பட்டுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தெருக்களில் கழிவு நீரை திறந்துவிட்டால் அபராதம்”