மே 19, 2018 இதழ்
தமிழ் வார இதழ்

தேர்தல் ஆணையம்: இரட்டை இலை சின்னம் தொடர்பாக அதிமுகவின் இரு அணிகளுக்கும் அவகாசம்Apr 21, 2017

ஜெயலலிதா மறைவிற்குப் பின் அதிமுக ஓ.பி.எஸ்அணி, சசிகலா அணி என இரண்டு அணியாக பிரிந்தது. பின் அதிமுக-வின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று ஓ.பி.எஸ் அணி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது. எனவே அதிமுக-வின் இரு அணிகளையும் விசாரணை செய்து வருகிறது தேர்தல் ஆணையம்.

Siragu admk

இதனிடையில் ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதும், அதிமுக-வின் இரு அணிகளும் இரட்டை இலை சின்னம் தனக்குத்தான் சொந்தம் என்று தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தது.

எனவே இரட்டை இலை சின்னத்தை முடக்கி, ஏப்ரல் 17ம் தேதி இரட்டை இலை சின்னம் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

சசிகலா தரப்பினர் ஆவணத்தை ஒப்படைக்க அவகாசம் தேவை என்ற கோரிக்கையை முன்வைத்தார். இதனை ஏற்று இரட்டை இலை சின்னம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய ஜுன் 16ம் தேதி வரை அவகாசம் கொடுத்தது தேர்தல் ஆணையம்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தேர்தல் ஆணையம்: இரட்டை இலை சின்னம் தொடர்பாக அதிமுகவின் இரு அணிகளுக்கும் அவகாசம்”

அதிகம் படித்தது