தை பொங்கலையொட்டி 10 சிறப்பு ரயில்கள்
Nov 28, 2016
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஜனவரி 13 முதல் 16 வரை நான்கு நாட்கள் விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். பல்வேறு மாவட்டங்களிலிருந்து சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பே ரயில் பயணத்திற்காக முன்பதிவு செய்துவிட்டனர். பலருக்கும் டிக்கட் கிடைக்கவில்லை.
மேலும் இப்பண்டிகையை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அதே போல் இந்த ஆண்டும் 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எந்தெந்த நேரத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்ற பட்டியல் தயார்செய்யப்பட்டு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தை பொங்கலையொட்டி 10 சிறப்பு ரயில்கள்”