அக்டோபர் 24, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

தொகுப்பு கவிதை (அன்பு.. மனிதம்.. சமத்துவம்.., இறந்துகொண்டிருக்கும் இயற்கை!!)

தொகுப்பு

Jan 26, 2019

அன்பு.. மனிதம்.. சமத்துவம்..

- மகேந்திரன் பெரியசாமி

sirau maanudam1உண்டு உறங்கிப் பரிசெனும் வாழ்வை
வீணாய்த் துறக்கும் வீரத் துரும்பே!
இயற்கை நடத்தும் இலவசப் பாடம்
தயக்கம் தவிர்த்துப் பயின்றிட வாராய்!

வானும் புவியும் வலம்வரும் கதிரும்
தண்மை பரப்பும் வெண்மை நிலவும்
விண்ணில் வரபிட்டு மோதி நாம் பார்த்ததுண்டா?
மண்ணில் மனதில் மட்டும் வரப்புகள் ஏனோ?

மேற்புவி மண்ணுக்காய் மாய்ந்திடும் மானிடர்
உட்புவியைப் பாதியாய் உடைத்திட முடியுமா?
ஒளிரும் நிலவை உதிக்கும் கதிரை
ஆளுக்குப் பாதியாய்ப் பங்கிட முடியுமோ?
கண்டங்கள் ஆளும் கதிரோன் தனது
சுற்றும் பரப்பைச் சுருக்கவா நினைப்பான்?

மதவெறி பிடித்ததால் மமதையுடன்சிலர்
‘மதம்’பிடி களிறென மாறினரே-இவர்கள்
மனிதம் வளர்த்து மா’தவம்’ புரிந்து
மா’நிலம்’ பயனுற மாற்றலாமே!
‘மதம்’ பிடித்த மனிதர்கட்கு
‘மனிதமும்’ பிடிக்க வழி வகுக்கலாமே!

கடவுளர் பெயரால் சாதிகள் பெயரால்
எதிரிகள் உலகில் இல்லா வண்ணம்
புன்னகை மொழியைப் பிரபஞ்சம் முழுதும்
பொதுமொழி யாக்கும் மனிதங்கள் வேண்டும்!
ஒருகுமிழ் காற்று உடல்பிரிமட்டும்
ஒன்றாய் இணைந்த குமுகாயம் அமைப்போம்!

உலக நாடுகள் ஒன்றென ஒருங்கி
உயிர்கள் யாவும் உணர்வால் ஒன்றி
ஒருங்கும் வண்ணம் மனிதம் வேண்டும்!

‘இன்று மட்டும்’ வாழ்ந்தாலும் மனிதநேயம் வெளிக்காட்டு-
வறியோர் எளியோரின் வாழ்வுக்கு வழிகாட்டு!
இப்புவியில் பிறந்ததற்காய் நற்செயல்கள் விட்டுப்போ;
இல்லையேல் நல்விதைகள் சிலவேனும் நட்டுப்போ!

அன்புச்சூரியன் அகத்தில் உதித்து
வேற்றுமை கருதா மாற்றம் நிகழ்த்தி
சாற்றுவோம் புதியதோர் சமநீதி படைத்தே!

 

 இறந்துகொண்டிருக்கும் இயற்கை!!

 

- அனஸ் ஹக்கீம்

 Siragu nature1

வானத்தின் அழுகையால் வாழ்நாள் வாழ்கின்ற நீ  -என்

வாழ்க்கையின் வாழ்த்துப்பாடலாய் மாரியதென்ன ?

பஞ்சவன்  படைத்தப் பஞ்ச பூதத்தின் புன்னகையாகிய நீ -என்

பாட்டின் படைப்பாய்  மாறியதென்ன ?

கண்டதெல்லாம் கவிதையாக்கும் கவிஞனின் கண்களை நீ -

கவர்ந்தெடுக்கக்  காரணமென்ன ?

காண்பெதெல்லாம் காசாக்கும் காலனின்  கண்ணுக்கு நீ -ஒரு

காகிதமாய் காட்சியளிக்கக் காரணெ மன்ன?

உனக்காக உருவான  கேள்விகள்  இங்கில்லை….

எனக்குள் உருவானக் கேள்விக்கு பதிலழிக்க இப்போது நீ-  இல்லை

இயற்கையே!!   நீ இல்லை .

 


தொகுப்பு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொகுப்பு கவிதை (அன்பு.. மனிதம்.. சமத்துவம்.., இறந்துகொண்டிருக்கும் இயற்கை!!)”

அதிகம் படித்தது