சனவரி 22, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

தொகுப்பு கவிதை (ஊசி போட்டுக்கோ அம்மு, எனது நண்பன் ஒரு பத்ரிகைக்காரன்)

இல. பிரகாசம்

Aug 3, 2019

 

ஊசி போட்டுக்கோ அம்மு

 

                                                -இல.பிரகாசம்

siragu oosi pottukko1

ஊசியை போட்டுக் கொள்

வேண்டாம்.

போட்டுக் கொண்டால் தான் சரியாகும்.

வலிக்குமே.

வலிக்காது அம்மு நான் இருக்கிறேன்

வேண்டாம்.

நான் போட்டுக் கொள்ளட்டுமா?

வேண்டாம். உனக்கு வலிக்கும்ல

முதலில் நான் போட்டுக் கொள்கிறேன் அப்புறம் நீ

ம்…

ஒரு ஊசி கூர்மையானதாக இருந்தது

குத்தப்பட்டதாக சொல்லப்பட்ட இடத்தில்

அதற்கான தடயங்களோ, வலித்ததற்கான ஒலிகளோ எழவேயில்லை.

ஏனெனில் போலியாய் ஒரு ஊசிக் குத்தல்

பிறகு எப்படி ‘உண்மையில்’ வலிக்கும்.

 

 எனது நண்பன் ஒரு பத்ரிகைக்காரன்

 

                                                -இல.பிரகாசம்

Siragu chettinadu poet1காகிதத்தில் கிறுக்கிக் கிறுக்கி

கோணல்மானலாய்க் கோடுகளைப் போட்டுக் கொண்டிருந்தான்.

 

வட்டமாக இரண்டு கிறுக்கல்கள்

அவற்றிற்கு மேலே இரண்டு வில்போன்ற வளைகோடுகள்

இப்போது வட்டக் கிறுக்கல்களுக்குள்

இரண்டு சிறிய உருண்டையை கருப்பாய்த் தீட்டினான்

அதற்குக் கீழே

நீளவாக்கில் மெல்லிய ஒரு கோடு

 

மீண்டும் தன் அருகில் இருந்த

ஷார்ப்பனரை எடுத்தான் திருகினான்

கூராயிருந்தது

திறந்த நிலையில் அந்த வாயை வரைந்தான்

 

 

அந்தக் கார்ட்டூன்

ஒரு பத்திரிகைக்காரனைப் போல இருந்தது.

எனது நண்பன் ஒரு பத்தரிகைக்காரன் என்பதும் வாஸ்தவம் தான்.

 

 


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொகுப்பு கவிதை (ஊசி போட்டுக்கோ அம்மு, எனது நண்பன் ஒரு பத்ரிகைக்காரன்)”

அதிகம் படித்தது