சூன் 19, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

தொகுப்பு கவிதை (கலைஞருக்கு அகவை இரண்டு, தேர்தல் தேர்வு!)

தொகுப்பு

Aug 8, 2020

கலைஞருக்கு அகவை இரண்டு

- வழக்கறிஞர் ம.வீ. கனிமொழி

siragu kalaignar1

 

அரிமா நோக்கு

ஆன்றவிந்த சான்றோன்

இன உணர்வு தீப்பந்தம்

ஈட்டியின் கூர்மூளை

உதிரத் தமிழவன்

ஊக்கினன் தமிழ்நாட்டை;

எரிதழல் வேந்தன்

ஏற்றின் ஆற்றல்

ஐயவன்;

ஒசியா பகலவன்

ஓங்கிய இமயம்

ஔவைத் தமிழவன்;

 

கஞன்ற ஞாயிறவன்;

காரிருளகற்றிய காப்பவன்;

கிழவனின் கிழக்குதிசை; – தமிழர்

கீற்றொளி நம்பிக்கை!

குன்றா இசையவன்

கூரிய உணர்வன்

கெடுப்பார்க்கும் அருளியவன்;

கேண்மையவன்;

கைம்மாறு வேண்டோன்

கொள்கைக் குன்றவன்- வள்ளுவர்

கோட்டத்தின் வித்தவன்

கௌவைக்கும் இன்முகத்தோன்!

 

கலைஞருக்கு அகவை இரண்டு

மறைவேது தலைமகனுக்கு! ?

 

தேர்தல் தேர்வு!

- ராஜ் குணநாயகம்

 

siragu vote1

 

ஒருசில வேட்பாளர்கள் வெற்றிபெறுவர்

அது மக்களின் நம்பிக்கை!

பல வேட்பாளர்கள் தோற்கடிக்கப்படுவர்

அது மக்களின் வெற்றி!

மக்களுக்கும்

நாட்டுக்கும்

தேவைப்படாத அரசியல்வாதிகள்

மக்களால் தூக்கி வீசப்படுவர்

தில்லுமுல்லுகள் பல செய்தே

மீண்டும் மீண்டும் வருவர் பின்கதவால்

அதிகாரங்கள், பதவிகள், பட்டங்கள்

அவர்களை அலங்கரிக்கும் மீண்டும்

கேடுகெட்ட கூட்டமொன்று

அவர்கள் துதிபாடும் வழைமைபோல்

அதுவே மக்களின் தோல்வி

நாசமாய் போம் நாடு!

-    ஈழன்.


தொகுப்பு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொகுப்பு கவிதை (கலைஞருக்கு அகவை இரண்டு, தேர்தல் தேர்வு!)”

அதிகம் படித்தது