செப்டம்பர் 18, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

தொகுப்பு கவிதை (டாஸ்மாக்!, விட்டுவிடுங்கள்…)

குமரகுரு அன்பு

Nov 21, 2020

டாஸ்மாக்!

siragu tasmac1இங்கிருக்கும் 5 டாஸ்மாக்கில்
எதில் இவன் குடித்திருப்பான்?
சாக்கடையில் ஊறி கிடக்கும்
இவனை சேர்ப்பதற்கு
அருகே மருத்துவமனை
எங்கேயிருக்கிறது?
உயிர் பிழைத்த பின்
செய்ய வேண்டிய கடமைகளை
செய்வானா?
இல்லை நாளை வேறொரு
நாற்முனை சந்திப்பில்
இதேநிலையில்  கிடப்பானா?
நமக்கென்ன என்று
செல்லவும் முடியவில்லை…
கருணையை சேமிக்கவா?
தவறான இடத்தில்
முளைக்கும் விதை
பிடுங்கியல்லவா எறியப்படும்?

விட்டுவிடுங்கள்…

siragu pakthi ilakkiyam2எங்களை விட்டு விடுங்கள்
நாங்கள் கர்ப்பப்பைக்குள்
சென்று ஒளிந்து கொள்கிறோம்…
அல்லது ஒரு முட்டைக்குள்…
எங்களுக்கு தேவையான
கங்காருவின் பை
எங்கேயிருக்கிறது?

நகங்களை கடித்து
துப்பி கொண்டேயிருக்கிறோம்!

எறும்புகள் இழுத்து செல்லும்
கரப்பான் பிணத்தின்
உறுப்புகள் உதிர்வது போல்
எங்களின் நம்பிக்கை
உதிர்கிறது உங்கள்
மீது பூக்களாக…
அப்போது நீங்கள்
மணவறையில் மணமக்களுக்கு
பின்னால் கூட்டத்தை
கண்டு பயந்தொடுங்கி
நிற்கும் ஒருவராக!
இருவராக! பலராக!
இன்னும் வெவ்வேறாட்களாக பிரிந்து எங்களை பிடிக்க துரத்தும் போது
எதனோடும் ஒப்பிட முடியாத
உவமையான உங்களை
மறந்து பனியன் மேலேறிய
தொந்தி தெரிய
குறட்டை விட்டு
உறங்கி விடுகிறோம்…


குமரகுரு அன்பு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொகுப்பு கவிதை (டாஸ்மாக்!, விட்டுவிடுங்கள்…)”

அதிகம் படித்தது