அக்டோபர் 23, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

தொகுப்பு கவிதை (நான் நானே!, வாழும் சுதந்திரம்!)

ராஜ் குணநாயகம்

Oct 9, 2021

நான் நானே!

 

siragu victory1நான்

வெற்றிகொள்வதுவும்

தோற்பதுவும்

என்னோடுதான்.

என்னை எவரும்

வெற்றிகொள்வதுவுமில்லை

நானும் எவரையும்

வெற்றிகொள்வதுவுமில்லை.

எனக்கு

நானே போட்டியாளன்!

என்

மிகச்சிறந்த நண்பன்

நானே.

என்

அதி பயங்கர எதிரியும்

நானே.

இப்போதெல்லாம்

என்னுள்தான்

என் தேடல்கள்…

என்னை தேடுவதிலே.

என்னை

காணவில்லையெனில்

என்னை

வெளியே தேடாதீர்கள்!

 

வாழும் சுதந்திரம்!

 

siragu freedom1விட்டுவிடுங்கள்

அவை அவை

சுதந்திரமாய்

அவைகளாகவே இருந்துவிடட்டும்!

பறவைகளின் வாழ்வு

மரங்களில்,கூடுகளில்

பறந்த திரிவதிலும்

மீன்களின் வாழ்வு

நீரில்

மண்புழுவின் வாழ்வு

மண்ணோடு.

இயற்கையின் ஒவ்வொரு படைப்பும்

சுதந்திரமானவை

தனிமனிதனும்தான்.

இயற்கையின் உயிர் கொண்ட ஓர் படைப்பை

உயிர் கொண்ட இன்னோர் படைப்பு

அடக்குதல்

ஆளுதல்

அழித்தல்

எனும் சுதந்திரமும்

வன்முறையே..

அதுவே

கடவுளின் பெயரால்

நடந்தால் கூட.

சிற்றெறும்புக்கும்

சிறு புழுவுக்கும்

பட்டாம்பூச்சிக்கும் கூட

வாழ்வு உண்டல்லோ.

அவரவர்

அவரவராகவே வாழட்டுமே

விட்டுவிடுங்கள்!

 


ராஜ் குணநாயகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொகுப்பு கவிதை (நான் நானே!, வாழும் சுதந்திரம்!)”

அதிகம் படித்தது