தொகுப்பு கவிதை (மகரந்தம், வானம், தாகம்)
குமரகுரு அன்புNov 5, 2022
மனம் பிறழ்ந்த நிலையில்
மலர் உதிர்த்த
மகரந்தம் உரசி பறக்கும் காற்றின்
சுழற்சி மடிப்பில் சிக்கிய சருகின்
சல்லடை துளைகள் வழி பொழியும்
ஒளிப் பெருகி தூரல்களாகி
நீர் சேலை உரசி பரவி
தெளித்து சருகை மேலெழுப்பி
பெருவனத்தின் தனிமையில்
ஒரு பறவை
அடை காக்கும் நேரம்
கிர்ர்ர்க்க் என நொறுக்க
பறவை குனிந்து
முட்டையைப்
பார்த்ததாம்
——————————————————–
வற்றா கடலுக்குள்ளிருந்து
துள்ளுகிற நதி மேல்
மிதக்கிறது
வானம்
——————————————————-
எங்கூரு அடிபைப்புல
தலகீழா தொங்கிகினு
தண்ணீ குடிக்கிற மைனா
கூட்டத்தில நானும் ஒருத்தி
குமரகுரு அன்பு
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொகுப்பு கவிதை (மகரந்தம், வானம், தாகம்)”