ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

தொழிலாளர் நல துணை கமிஷனர் போக்குவரத்து தொழிலாளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை இழுபறிMay 13, 2017

தமிழகஅரசு போக்குவரத்துக் கழகங்களில் 2.43 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இந்த ஊழியர்களுக்கும் மற்றும் ஓய்வூதியர்களுக்குமான ஊதியத்தொகை நிலுவையில்உள்ளது.

Siragu buses-strike

மேலும் 2016 செப்டம்பர் முதல் அமலாக வேண்டிய 13- வது ஊதிய ஒப்பந்தம் குறித்தும்   இன்னும் பேச்சுவார்த்தை முடியவில்லை என்பதாலும் வரும் 15ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துஇருந்தது.

இந்த வேலைநிறுத்தம் குறித்து நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற பிறகு அரசு ஒதுக்குவதாக இருந்தரூ.750 கோடி போதாது என்பதால் திட்டமிட்டபடி 15ம் தேதி முதல் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது.

இன்றும்(13.05.17) இதுகுறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதிலும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில் இன்று மாலை 4 மணிக்கும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொழிலாளர் நல துணை கமிஷனர் போக்குவரத்து தொழிலாளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை இழுபறி”

அதிகம் படித்தது