ஆகஸ்டு 8, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

தோல்!(கவிதை)

இல. பிரகாசம்

May 20, 2017

Siragu parai1

 

இறந்த பின்னும்
உழைப்பின் பெருமையை பறைசாற்றுகிறது
இந்த உலகிற்கு

உழைக்கும் வர்க்கப் போராட்டதினரின்
பேரொலி யெழுப்பும்
ஆயுதமாக

பண்பாட்டுப் படையல்களில்
காதுகளுக்கு இசையாக

நவநாகரீக கோலத்தினரின்
அடிகளுக்கு அணியாக

வென்றெடுக்கும் சமுதாயப் புரட்சிகளின்
விதைகளுக்கு விடைசொல்லும்
வரிப் பாடல்களுக்கு
வடிவாக தோல்!


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தோல்!(கவிதை)”

அதிகம் படித்தது