அக்டோபர் 1, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

தோல் நிறுவனர் மகேஷ் அவர்களின் நேர்காணல்

சித்திர சேனன்

Apr 11, 2015

leather1கேள்வி: உங்களைப் பற்றிய அறிமுகம்?

பதில்: என் பெயர் மகேஷ். சொந்த ஊர் பெரம்பலூர் மாவட்டம், அப்பா தினக்கூலி விவசாயம், அம்மாவும் தினக்கூலிதான். நான் வீட்டிற்கு மூத்த மகன், எனக்கு அடுத்தது தம்பி, ஒரு தங்கை நாங்கள் மூன்றுபேருமே படித்தவர்கள். நான் B.A. History நந்தனம் ஆர்ட்ஸ் கல்லூரி சென்னையில் 2002-2005 ல் முடித்தேன். என்னுடைய தம்பி M.A, B.ed முடித்திருக்கிறார். என் தங்கை M.A, M.Phil, B.ed, தற்பொழுது M.Phil படித்துக்கொண்டிருக்கிறார். நான் சென்னைக்கு வந்து படித்து முடித்தபின் 2006க்கு மேல் ஏ.வி.தாமஸ் என்கிற ஒரு தோல் (leather) நிறுவனத்தில் ஒரு சின்ன மேற்பார்வையாளராக இணைந்தேன். எனக்கு அதன் மூலம் கிடைத்த அனுபவத்தின் மூலமாக ஒரு ஐந்தாண்டு வருடத்திற்குப் பிறகு தனியாக சுயதொழில் பண்ணவேண்டும் என்று முயற்சியில் இறங்கி தற்பொழுது, தொழிலாளர் வேலைகள் (Job work) மட்டுமே செய்து கொடுக்கக்கூடிய ஒரு சிறிய நிறுவனத்தைத் துவங்கியிருக்கிறேன். என்னுடைய நிறுவனத்தில் பதினைந்து நபர்கள் வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள்.

leather4கேள்வி: உங்கள் தோல் நிறுவனமானது எப்போது துவங்கப்பட்டது, இன்றைய வளர்ச்சி என்ன?

பதில்: எனது தோல் பொருள் உற்பத்தி நிறுவனம் துவங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிறது. தற்போதைய வளர்ச்சி என்று சொல்லவேண்டும் என்றால் ஆரம்பத்தில் இருந்ததை விட ordersகளும் எடுக்கிற வேலைகளும் சிறிது கூடுதலான விசயங்களும் வரவேற்கத்தக்க விசயமாக வந்துகொண்டே இருக்கிறது. ஆட்களுக்குக் கிடைக்கிற வேலைகளும், அவர்களுக்கு செய்யக்கூடிய விசயங்களும் சுமூகமான நிலையில் இருந்துகொண்டிருக்கிறது. அடுத்து வளர்ச்சியை நோக்கி தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம்.

கேள்வி: பல்வேறு வகையான சுயதொழில் இருக்கும் பொழுது தோல் சம்மந்தப்பட்ட இந்தத் தொழிலை தேர்ந்தெடுத்தது ஏன்?

பதில்: படித்து முடித்த உடனே வேலைவாய்ப்பு இல்லையே என்று தேடிக்கொண்டிருக்கும் பொழுது எனக்கு கிடைத்த வேலை இதுதான். எனவே அந்த வேலையில் முழுமையாக ஈடுபடவேண்டும், அதிலிருந்து ஏதாவது கற்றுக்கொள்ளவேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டுக்கொண்டிருந்தேன். அப்படி ஒரு சூழ்நிலையில் எனக்குத் தெரிந்த வேலையில் நாம் ஏன் சுயதொழிலாக செய்யக்கூடாது என்ற உந்து சக்திதான் இன்றைக்கு சுயதொழில் ஏதாவது ஆரம்பிக்கவேண்டும் என்ற முயற்சியிலிருந்து ஒரு சிறிய அடி எடுத்து வைக்கக் காரணம்.

leather3கேள்வி: பல்வேறு வகையான தோல் நிறுவனங்கள் சென்னையில் இருக்கும் பொழுது உங்களது தோல் நிறுவனம் அதையெல்லாம் மீறி வெற்றிநடை போடுவதற்காக என்ன முயற்சி எடுத்து வருகிறீர்கள்?

பதில்: இப்பொழுது இருப்பதிலிருந்து அடுத்த நிலைக்கு வருவதற்கு, நேரடி ஏற்றுமதி செய்வதற்கான ஆட்கள் குறைவாக இருக்கிறார்கள். அவர்கள் மாதிரி ஆட்களிடமிருந்துதான் உட்குத்தகைக்காரராக (sub contractor) ஆக எடுத்து வேலைசெய்து கொண்டிருக்கிறோம். அடுத்த நிலைக்கு செல்வதற்கு சிறு சிறு வாய்ப்புகள் அதாவது வெளிநாடுகளுக்கோ அல்லது உள்நாட்டிலேயோ கிடைக்கும் பட்சத்தில் வளர்ச்சியை நோக்கிக் கொண்டு செல்வதற்கு முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறோம். வேலைவாய்ப்பு உருவாவதற்கு முன்னால் தேவையான வசதிகளை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம்.

கேள்வி: உங்கள் நிறுவனத்தில் என்ன விதமான பொருட்களை தயாரிக்கிறீர்கள்?

பதில்: தோல் பொருட்களில் (leather goods) பார்த்தீர்கள் என்றால் நடைமுறையில் இருக்கக்கூடிய பணப்பை (money purse) தயாரிக்கிறோம், அதற்கான பரிசுப்பெட்டிகள் (gift boxes) தயாரிக்கிறோம். இதை சேர்க்காமல் உணவு விடுதிக்கான menu folder, menu cards மற்றும் holders, head band, Directory, Diary Cover, Bible Covers இந்த மாதிரியான விசயங்களை நாங்கள் தயாரித்துக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி: இதுவரை நீங்கள் தயாரித்த பொருட்களை எங்கு எப்படி சந்தைப்படுத்துவது?

பதில்:job work செய்வதால் சந்தைப்படுத்துதல் எங்களுடைய கைகளில் இல்லை, சந்தைப்படுத்தவும் முடியாது. நாங்கள் Direct Order எடுப்பவர்களிடமிருந்து Sub Contractor ஆக கூலித்தொழில் (labor) வேலை மட்டுமே செய்து கொடுத்துக்கொண்டிருக்கிறோம். எங்களது பார்வைக்கு ஏ.வி.தாமஸ் நிறுவனத்திடமிருந்து job work எடுத்து பண்ணிக்கொண்டிருக்கிறோம் மற்றும் Trends India Products என்ற நிறுவனங்களிலிருந்தும் job work எடுத்து பண்ணிக்கொண்டிருக்கிறோம்.

கேள்வி: இந்தத் தோல் தொழிலுக்கு அரசு கடனுதவி வழங்குகிறதா?

பதில்: சுயதொழில் செய்கிற இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் நிறைய உதவி செய்வதாக அவர்கள் அறிவித்திருந்தார்கள். கடனுதவிக்காக ஏழரை லட்சம் ரூபாய் விண்ணப்பித்திருந்தோம், ஆனால் சொந்த மாவட்டத்திலேயே செய்தால்தான் கொடுக்கமுடியும் என்று வங்கி மேலாளர்களால் நிராகரிக்கப்பட்டதால் அந்தக் கடன் எங்களுக்கு கிடைக்க வாய்ப்பு இல்லாமலே போய் விட்டது.

கேள்வி: இந்த நிறுவனத்தை எவ்வளவு முதலீடு செய்து துவங்கினீர்கள்?

பதில்: ஆரம்பகட்ட முதலீடாக இரண்டரை லட்சம் ரூபாய் முதலீடு பண்ணியிருந்தேன். வாடகை மற்றும் ஒரு மாதத்திற்கான சம்பளம் மற்றும் இதர தேவைகளுக்காக இரண்டரை லட்சம் ரூபாய் ஆரம்ப முதலீடாக செய்திருந்தேன்.

leather7கேள்வி: உங்களது நிறுவனத்தில் இதுவரை பல பொருட்களை செய்துள்ளீர்கள். இந்தப் பொருட்களை எல்லாம் செய்வதற்கு எந்த விதமான தோலை பயன்படுத்துகிறீர்கள்? அல்லது ஒவ்வொரு பொருளுக்கும் இந்தத் தோலைத்தான் பயன்படுத்தவேண்டும் என்று ஏதும் விதிமுறை உள்ளதா?

பதில்: நான் job work செய்வதால், எனக்கு order கொடுத்துள்ளவர்கள் என்ன தோல் கேட்கிறார்களோ, அதை பயன்படுத்துவோம். அவர்கள் நான் என்ன வேலை செய்யவேண்டும் என்று designவேலை முதற்கொண்டு அவர்கள் கொடுத்துவிடுகிறார்கள். கூலி வேலை மட்டும்தான் நான் செய்துகொண்டிருக்கிறேன். ஒருவேளை எனக்கு நேரடியான வாய்ப்புகளை நான் உருவாக்கிக் கொள்ளும் பட்சத்தில், எனக்கு அது கிடைக்கும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் என்ன மாதிரியாக விரும்புகிறார்கள் என்பதைப் பார்த்துவிட்டு தேவைக்கு ஏற்ற மாதிரியான தோல்களையோ, கேட்கும் தரமான பொருட்களையோ தருவதற்கு முயற்சி செய்யமுடியும்.

கேள்வி: இத்தனை விதமான பொருட்களை உருவாக்குவதற்கு தோல் மட்டுமல்லாது வேறு என்னவிதமான இடுபொருட்களை பயன்படுத்துகிறீர்கள்?

பதில்: இடுபொருட்கள் என்று பாத்தீர்கள் என்றால் paste, tap, thread இந்த மாதிரியான விசயங்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இணைப்பதற்காக anabond பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதற்கடுத்ததாக ஒரு பெரிய தயாரிப்பான கரீபியன் அயர்லேன்ட் என்பதற்கான மாதிரி மட்டும் செய்யக்கூடிய ஒரு வாய்ப்பு வந்தது, அது ஒரு பெரிய agralic stand 2 அடிக்கு 3 அடி என்ற அளவில் எடுத்து செய்திருக்கிறோம். ஒரே ஒரு மாதிரி மட்டும்தான் செய்யமுடிந்ததே தவிர அதற்கான orders மறுபடியும் எங்களுக்குக் கிடைக்க வாய்ப்பில்லாமல் இருந்தது.

கேள்வி: உங்கள் நிறுவனத்தின் எதிர்காலத் திட்டம் என்ன?

பதில்: இந்த நிறுவனம் அவசரத்தால் எடுத்த முடிவு இல்லை, மிகவும் நிதானத்துடன் கட்டாயம் நாம் சுயதொழில் செய்தாகவேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கிய நிறுவனம் இது. இந்த நிறுவனத்தை இன்னும் பத்தாண்டு காலத்திற்குள் ஒரு குட்டி exports என்று சொல்லும் அளவில் ஒரு சிறிய ஏற்றுமதி நிறுவனமாக உயர்த்த வேண்டிய நிலைமையில், கட்டாயம் செய்யவேண்டும் என்ற முனைப்போடு முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். என்னுடன் வேலை செய்யும் ஒவ்வொரு பணியாட்களும் அந்த விதத்தில் மிகவும் ஆதரவாக இருக்கிறார்கள். இரண்டாவது பார்த்தீர்கள் என்றால், இந்த நிறுவனம் வளர்ச்சியடையும் பட்சத்தில் இன்றைக்கு இருக்கிற பதினைந்து நபர்கள் இல்லாமல் குறைந்த பட்சம் சென்னையிலும் சென்னை சுற்றி உள்ள பகுதிகளிலும், என்னுடைய சொந்த மாவட்டமான பெரம்பலூர் மாவட்டம் பென்னகுனம் கிராமத்திலேயும் மொத்தத்தில் குறைந்தபட்சம் ஆயிரம் நபர்களுக்கு மேல் வேலை கொடுக்கக்கூடிய மிகப்பெரிய நிறுவனமாக உருவாக்கவேண்டும் என்பது என்னுடைய எதிர்காலத் திட்டம்.

கேள்வி: இன்று படித்துவிட்டு வேலை இல்லை எனக்கூறும் இளைஞர்களுக்கு தாங்கள் கூற விரும்பும் அறிவுரை என்ன?

பதில்:அறிவுரை என்ற விசயத்தை விட என் பார்வையில் தெரிந்த விசயம் என்று பார்த்தீர்கள் என்றால் அரசு மூலமாக கிடைக்கும் வேலைவாய்ப்பைத் தேடி அலைவதை விட வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொள்ளக்கூடிய சூழல் நிறைய இருக்கிறது. வெறும் பட்டப்படிப்பு படித்திருந்தால் போதும் இன்றைக்கு படிப்பிற்காக பதினைந்து வருடம் செலவு செய்கிற இளைஞர்கள், வேலைவாய்ப்புக்காக இரண்டு வருடம் செலவு செய்வதற்காக அவர்கள் முயற்சி எடுப்பதில்லை இது ஒன்று. படித்து முடித்த இளைஞர்கள் இந்தப் படிப்பை வைத்து வேறு என்ன செய்யலாம், எவ்வளவோஇருக்கிறது. Civil Service தேர்வுகள் இருக்கிறது, Group1 தேர்வு இருக்கிறது, Group2 தேர்வு இருக்கிறது, நேரடியாக இதில் தேர்வாகும் பட்சத்தில் வேலை அவர்களைத் தேடியே வரும். அவர்களைத் தேடி அரசிடம் வேலை கொடுங்கள் என்ற கோரிக்கையை அவர்கள் முன் வைக்கவேண்டும் என்ற தேவையே இல்லை. இந்தத் துறைக்குத்தான் செல்லவேண்டும், படித்ததில்தான் இருக்கவேண்டும் என்பதையெல்லாம் அவர்கள் விட்டுவிட்டு ஏதாவது ஒரு துறையில் முதலில் கிடைக்கிற வேலைகளை பயன்படுத்திக்கொண்டு அதிலிருக்கும் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு அதன்மூலமாக மேலே வருவதற்கு முயற்சி செய்யலாம் என்பதுதான் என்னுடைய கருத்து.

கேள்வி: இதுவரை இளைஞர்களை சுயதொழில் செய்ய ஊக்கப்படுத்தி உள்ளீர்களா?

பதில்: எனக்குத் தெரிந்தவரை என்னுடைய நண்பர் கோவிந்து என்பவர் தொழில் ஆரம்பித்து செய்துகொண்டிருந்தார். ஆனால் இந்த மாதிரியான சிறு தொழில் பண்ணிக்கொண்டிருக்கும் பொழுது நான் வேலை செய்துகொண்டிருந்த Trends India Company என்ற நிறுவனத்திலிருந்து முதன்முதலில் கூலித்தொழில் செய்துகொண்டிருந்தவரை purchase order கொடுத்து தொழில் துவங்குவதற்கு ஊக்கமாக இருந்திருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும்.

leather5கேள்வி: நீங்கள் தயாரித்த பொருட்களானது உள்ளுர் மக்கள் பயன்படுத்துகிறார்களா அல்லது வெளிநாட்டு மக்கள் பயன்படுத்துகிறார்களா?

பதில்: பணப்பை (money purse) அதற்கு சம்மந்தப்பட்ட பொருட்கள் எல்லாமே ஏற்றுமதியாகிறது. உள்ளுரில் உணவகங்களுக்கு, IT உணவகங்கள், GRT grand, Lemon Tree Hotels இந்த மாதிரியான உணவகங்களுக்கு செய்கிற menu cards எல்லாம் இங்கேயே பயன்படுத்துகிறார்கள்.

சிறகுக்கு தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி.


சித்திர சேனன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தோல் நிறுவனர் மகேஷ் அவர்களின் நேர்காணல்”

அதிகம் படித்தது