ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 11-வது நாளாக முடங்கியதுNov 30, 2016

கடந்த 8ம் தேதி 500, 1000 ரூபாய் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததிலிருந்து மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

siragu-rajya-sabha

இந்நிலையில் கடந்த 16ம் தேதி நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் துவங்கியது. ஆரம்பித்த நாள்முதல் ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியுள்ளது. ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்றும், மக்கள் படும் சிரமத்திற்கு பதில் கூற வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதுடன் போராட்டமும் நடத்தி வருகின்றனர் எதிர்கட்சிகள்.

11வது நாளான இன்றும் நாடாளுமன்றம் துவங்கியதும், எதிர்கட்சிகள் வழக்கம்போல் அமளியில் ஈடுபட்டனர். இன்றைய லோக்சபாவில் பிரதமர் மோடி வருகை தந்திருந்தார். இதில் எதிர்கட்சிகள் ரூபாய் நோட்டு விவகாரம் குறித்தும், காஷ்மீரில் தீவிரவாதிகளின் அத்துமீறிய தாக்குதலை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். அதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 11-வது நாளாக முடங்கியது”

அதிகம் படித்தது