நாடு முழுக்க ஜி.எஸ்.டி வரி விதிப்பு: ஜூலை 1 முதல் அமல்
Feb 28, 2017
சரக்கு மற்றும் சேவை வரி சட்டமான ஜி.எஸ்.டி நாடு முழுவதிலும் ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது என்று மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
பல நுகர்வு வரிகளை நீக்கிவிட்டு ஜி.எஸ்.டி வரி மட்டும் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். இவ்வரியை அமல்படுத்த அனைத்து மாநிலங்களும் ஒப்புக்கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
ஜி.எஸ்.டி சட்டம் தொடர்பான பல்வேறு இடர்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது, இது தொடர்பாக அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்து முடிக்கப்பட்டது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “நாடு முழுக்க ஜி.எஸ்.டி வரி விதிப்பு: ஜூலை 1 முதல் அமல்”