செப்டம்பர் 26, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

நான் யார்? என்னைத் தெரியுமா?? (கவிதை)

முத்தையா சிவனேசன்

Apr 20, 2019

Dec-23-2017-newsletter1

குயில் கூவதற்கு நான் வேண்டும்
மயில் அகவுதற்கு நான் வேண்டும்
குரங்கு தாவுதற்கு நான் வேண்டும்
மனிசிதலை சிவுதற்கும் நான் வேண்டும்
அவர இவர் மேவுதற்கும் நான் வேண்டும்
வயலில் ஒன்றை தூவுதற்கும் வயிற்றில்
ஒன்றைக் காவுதற்வும் நான் வேண்டும்
அப்படி என்றால் நான் யார்?

தீவுக்கு என்ன வேண்டும் தீர்வு வேண்டும்?
ஒரு நல்ல தீர்வுக்கு என்ன வேண்டும்??
தீவுக்கும் தீர்வுக்கும் நான் வேண்டும்
கதவிலும் நான் இருப்பேன் மதவிலும் நான் இருப்பேன்
இரவிலும் நான் வருவேன் உங்கள் கனவிலும் நான் வருவேன்
நிலவிலும் நானிருப்பேன் உங்கள் நினைவிலே நான் நிச்சயம் இருப்பேன்
நான் உண்மையில் ஆர்?

பதிவிலும் நான் ஒன்று படிவிலும் நான் உண்டு
தெரிவிலும் நான் ஒன்று தெளிவிலும் நான் உண்டு
சரிவிலும் நான் பிடிப்பேன் அழிவையும் நான் முடிப்பேன்
மடிவிலும் இருப்பதனால் நாட்டின் விடிவிலும் எனக்கு பங்குண்டு
உயர்வுக்கும் தாழ்வுக்கும் உறவுக்கும் பிரிவுக்கும்
வரவுக்கும் செலவுக்கும் நான் வேண்டும்
நான் யார் என்று கொஞ்சம் தெரிகிறதா?

முடி இல்லாவிட்டால் முடிவில்ல
பணி இல்லாட்டி பணிவில்ல
துணியை நீக்கி விட்டால் துணிவில்ல
ஏன் நானில்லாட்டி இவைகள் ஒண்டுமே இல்ல
மெல்உடன் நான் சேர்ந்து உங்களை மெலிவாக்கிறேன்
செல்உடன் நான் சேர்ந்து உங்களுக்கு செலவு தருகிறேன்
சாஉடன் நான் சேர்ந்து சாவடிக்கிறேன் என்ன செய்ய?
என்னுடன் சேர்ந்தவர்கள் அப்படி
வாழ் உன் சேர்ந்து உங்களுக்கு வாழ்வு தருகிறேன்
அது போதாதா? அப்ப நான் யார்?

வடியுடன் சேர்ந்தென்ன நான் உங்களுக்கு வெறியாதாறன் இல்லையே வடிவைத் தானே தருகிறேன்
(வடித்தெடுக்கிற தெல்லாம் வடி)
கழிவிலும் நான் ஒன்று என்று என்னை கழித்துவிடாதீர்கள் உங்கள் அறிவிலும் நான் உண்டு
அப்பநான் யார்?

தமிழ்

நெடுங்கணக்கில் பின்னுக்கவாற எனக்கே இவ்வளவு இருக்குது என்றால்

முன்னுக்கு நடுவில வாறவைக்கு எவ்வளவு கதைக்கு இருக்கும்

இப்ப எண்டாலும் தெரியுதா நான் யார்என்று?

நான் “வு”
இது 10 உலகம் சேர்ந்து இவ்வுலகம் வந்தபோது அங்கு நான் பிரசவிக்கப்பட்டேன்
(இவ்வுலகம் என்றசொல் வந்தபோது நான் வு அங்கே வந்தேன் அவ்வளவு தான்)

தமிழோட விளையாடுங்கோ…
வாழ்க தமிழ் மொழி வாழ்க தமிழ் மொழி
வாழிய வாழியவே!


முத்தையா சிவனேசன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நான் யார்? என்னைத் தெரியுமா?? (கவிதை)”

அதிகம் படித்தது