சனவரி 16, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

நாள் கூலித்தொழிலாளி (கவிதை)

ராஜ் குணநாயகம்

Apr 4, 2020

siragu ooradangu1

 

 

இயற்கை

தன் விதியை

தானே எழுதிக்கொள்கிறது..

விஞ்ஞானமும் மெய்ஞானமும்

தமக்குள் முட்டி மோதிக்கொள்கையில்..

 

நாள் கூலித்தொழிலாளி!

வெளியே போனால்

கொரோனா வைரஸ் பிடிக்குமாம்..

வீட்டுள்ளேயிருந்துவிட்டால்

எங்கள் அடுப்பில் சோற்றுப்பானை ஏறாது

மரணம்

கொரோனாவாலா

பட்டினியாலா

எங்கள் முன்னே உள்ள தெரிவுகள்!

நானோ ஓர்

நாள் கூலித்தொழிலாளி..

-ஈழன்-

 

மனிதர்கள் அனைவருமே தங்களுக்குள் உள்ள அனைத்து வேறுபாடுகளையும் களைந்து, மறந்து ஒன்றுபட்டு செயற்படவேண்டிய இந்நேரத்தில் இப்பதிவு கீழ்த்தரமான அரசியல் நோக்கம் கொண்ட ஒரு பதிவாகவே பலராலும் பார்க்கப்படும்.அன்றாட உழைப்பில் வாழும் குடும்பங்கள், நாட் கூலித்தொழிலாளிகள், ஏழைகள் என வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் நிலைமைகளையும் உணர்ந்து செயற்படுவது சால சிறந்தது.

 

 


ராஜ் குணநாயகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நாள் கூலித்தொழிலாளி (கவிதை)”

அதிகம் படித்தது