ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

நீட் தேர்வில் ஆடைக்கட்டுப்பாடு: மனித உரிமை கமிஷன் சிபிஎஸ்இ.,-க்கு நோட்டீஸ்May 17, 2017

இந்தியா முழுவதும் மே 7ம் தேதி மருத்துவ படிப்புக்கான பொது தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தேர்வு எழுத சென்ற மாணவ மாணவிகளுக்கு ஆடைக்கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டது.

Siragu neet exam

அவ்வகையில் கேரள மாநிலம் கண்ணூரில் நீட் தேர்வு எழுத வந்த மாணவி ஒருவரிடம் உள்ளாடையை அகற்றுமாறு அங்கிருந்த ஆசிரியர்கள் தெரவித்துள்ளனர். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

இது தொடர்பாக இரண்டு ஆசிரியர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மனித உரிமை கமிஷனிடம் புகார் அளிக்கப்பட்டது. இதில் இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ.,க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது மனித உரிமை கமிஷன். மேலும் அளிக்க வேண்டிய பதிலை நான்கு வாரங்களுக்குள் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது மனித உரிமை கமிஷன்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நீட் தேர்வில் ஆடைக்கட்டுப்பாடு: மனித உரிமை கமிஷன் சிபிஎஸ்இ.,-க்கு நோட்டீஸ்”

அதிகம் படித்தது