மே 14, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கக் கோரிய மனு தள்ளுபடிMay 18, 2017

இந்தியாமுழுவதும் மே 7ம் தேதி மருத்துவ படிப்புக்கான பொது தகுதி மற்றும்நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தேர்வு எழுத சென்ற மாணவ மாணவிகளுக்குஆடைக்கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டது.

Siragu neet exam

மேலும் தமிழக மாணவர்களுக்கு கடினமான கேள்வி கேட்கப்பட்டதாக புகார்கள் எழுந்ததன்பேரில் மதுரை உயர்நீதிமன்றத்தில் மாணவர்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேர்வு நடைபெறும் என்று அறிவித்துவிட்டு, தமிழகத்தில் கடினமாக கேள்வி கேள்வித்தாளை வைத்து நீட் தேர்வு நடத்தப்பட்டதால், இதனை ரத்து செய்ய வேண்டும் என்றும், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது விசாரணை செய்த நீதிமன்றம். மேலும் நீட் தேர்வுக்கான ஒரே கேள்வித்தாளை நாடுமுழுவதும் கொடுக்காதது ஏன்? என்றும், இது குறித்து சிபிஎஸ்இ விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இவ்வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது மதுரை உயர்நீதிமன்றம்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கக் கோரிய மனு தள்ளுபடி”

அதிகம் படித்தது