ஆகஸ்டு 1, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

நீத்தார் பெருமை (கவிதை)

தமிழ்த்தம்பி

Mar 17, 2018

மாட்சிமை தங்கிய மகளிருக்கு

உலக மகளிர்தின வாழ்த்துகள்!

Siragu penniyam1

 

செயற்கரிய செய்வார் பெரியர் சிரியர்(?!)

செயற்கரிய செய்கலா தார்

 

என்னே ஒரு பொருத்தம்?

மகளிரின் நன்நாளில்

மகளிருக்கு மாண்பு செய்த

மகத்துவரே பேசுபொருள்!

 

சமூகம் விழித்தெழ

சமத்துவம் மேலோங்க

சுயம்புகள் சுடர்விட

நயம்பல செய்ததொரு

பெருமகன் பெரியார்!

 

தாலி எனும் வேலிக்குள்

பொட்டு எனும் வட்டத்தில்

பூ எனும் புதருக்குள்

மட்டுமே

பூட்டி வைக்கப்படுபவளல்ல பெண்!

 

சக மனிதர் போல

அகமும் புறமும்

அறிந்து புரிந்தவள்

தெரிந்து தெளிபவள்!

இன்றுகூறும் இல்லவளை

வல்லவளாகவே வழங்கிவந்தன

இனிய இலக்கியங்கள்!

சான்றுமிகு சரித்திரங்கள்!!

 

இடையில் வந்ததே இல்லவள்..

முதலில் இருந்தது இணையவள்!!

 

ஆணும் பெண்ணும் இயற்கொடை

அதனில் ஏன் இனத் தடை?

 

ஆம்,

இடையில் வந்த இடையூறுகள்

தடைபல கொண்டு தடுத்தாண்டன!

உடைப்பதற்கு வழியறியா

விடிவுக்கு விடைதெரியா

விழித்திருந்த சமூகத்தை

விழித்தெழச் செய்த விடியல் அவர்!

 

வீட்டுக்கு விளக்கேற்ற

வேண்டுமொரு மருமகள்

என்றதொரு சமூகத்தை

மறுதளித்து மாற்றாக

நாட்டுக்கு ஒளியேற்ற நம்மகளிர்

நாடிவர வேண்டுமென்ற நன்மகன்!

 

மாதவிடாய்த் தீட்டு என

மாதர்தம்மை இழிவேற்றி

தூரம் என ஓரத்தில்

பாரமாகக் பார்க்கவிட்ட

பாழான பழசான சமூகத்திற்கு

பாடம் புகட்டவே

இயற்கைத்தாய் அனுப்பிவைத்த

இன்றியமையாத் தந்தை அவர்!

 

அன்பு ஒழுகுவார் அன்னை!

அறிவு ஊட்டுவார் தந்தை!!

 

எதிர்கால எதார்த்தமறிந்து

சமூகமெனும் பிள்ளைகட்கு

உரக்கச்சொன்ன

உண்மைத் தந்தை பெரியார்!

 

அவர்வழியில் அறவழியில்

அகமும் புறமும் அறிந்த

எண்ணூறுகளாய்

என்றும் திகழ்ந்திட

அன்னையர், தமக்கையர், தங்கையர்,

இணையர், இனியமகள்கள் அனைவருக்கும்

மகளிர்தின மகிழ்வான வாழ்த்துகள்!

 

 

 


தமிழ்த்தம்பி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நீத்தார் பெருமை (கவிதை)”

அதிகம் படித்தது