நூறு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி-யிலிருந்து விலக்கு
May 18, 2017
ஸ்ரீநகரில் இன்று ஜிஎஸ்டி கவுன்சிலின் 14 வது கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எந்த பொருளுக்கு என்ன விலை, எவ்வளவு வரி போன்ற ஆலோசனை நடத்தப்பட்டது. ஜி.எஸ்.டி-யிலிருந்து விலக்கு அளிக்கப்படும் பொருட்களின் பட்டியல் நூறு பொருட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
தற்போது 299 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி-யிலிருந்து அளிக்கப்பட்டு இருந்தது. இது ஜூலை முதல் தேதியிலிருந்து அமல்படுத்தப்பட உள்ளது. ஜி.எஸ்.டி விலக்கு பட்டியலில் உப்பு, உற்பத்தி பொருட்கள், பழங்கள், காய்கறிகள், மாவு வகைகள், பால், முட்டை, டி, காபி போன்ற பொருட்கள் இடம்பெற்றுள்ளது.
ஓட்டல் போன்ற சேவைகளுக்கு பல விதமானக் வரிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் பல பொருட்களுக்கு 5,12,18,28 என்ற சதவீத அடிப்படையில் வரி நிர்ணயிக்கப்பட உள்ளது. அத்யாவசிய பொருள் இல்லாத தங்கம் போன்ற பொருட்களுக்கு ஒரு சதவீதத்திற்கு பதிலாக ஐந்து சதவீதம் வரி விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “நூறு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி-யிலிருந்து விலக்கு”