நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இரு சக்கர வாகங்களில் பேரணி
Feb 25, 2017
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன்என்ற இயற்கை எரிவாயுவை பூமியிலிருந்து எடுக்க, கர்நாடகத்தைச் சேர்ந்ததனியார் நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு.
இத்திட்டத்தால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும், மீத்தேன் திட்டத்தை ஹைட்ரோ கார்பன் திட்டம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது என்று அக்கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இத்திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று நெடுவாசலில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வரிசையில் இத்திட்டத்தினால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இன்று இரு சக்கர வாகனங்களில் பேரணி நடைபெற்று வருகிறது. நாளை புதுக்கோட்டை மாவட்டம் திலகர் திடலில் போராட்டம் நடைபெற உள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இரு சக்கர வாகங்களில் பேரணி”