மே 8, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

நேரமில்லை(கவிதை)

சரஸ்வதி ராசேந்திரன்

Oct 28, 2017

siragu neramillai1

 

கம்ப்யூட்டர் யுகத்தில்

காவிரி பூம்பட்டினமும்

கலிபோர்னியாவும்

நெருங்கி விட்டன

செல்போன்களும்

தொலைக்காட்சியும்

குடும்ப உறவுகளை

குலைத்துப்போட்டன

தாயிக்குப் பிள்ளையை

கொஞ்ச நேரமில்லை

பிள்ளைக்கு தாயோடு

பேச நேரமில்லை

கணவனுக்கு மனைவியின்

தேவை யறிய நேரமில்லை

மனைவிக்கு கணவனிடம்

சுகவீனத்தை சொல்லக்கூட

நேரமில்லை

பக்கத்து வீட்டுக்காரனைப்

பற்றிய அறிவு மழுங்கிவிட்டது

சாவுன்னா பத்துபேர்

கூடக்கூட நேரமில்லை

எப்பொழுதும் வீட்டுக்கதவு

மூடப்பட்டுக்கிடக்கிறது

அருகருகே இருந்தும்

அந்நியப்பட்டே கிடக்கிறோம்

போலித்தனமான இந்த

வாழ்க்கை முறை மாறி

மறுபடி நிஜமான முகம்

எப்போது திரும்புமோ

 


சரஸ்வதி ராசேந்திரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நேரமில்லை(கவிதை)”

அதிகம் படித்தது