ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

பணமில்லா பரிவர்த்தனைக்கு இலவச உதவி எண்Jan 5, 2017

மத்திய அரசு பணமில்லா பரிவர்த்தனையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ.50 முதல் ரூ.3000 வரை பணமில்லாத பரிவர்த்தனை அதாவது டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வோர்க்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

siragu-debit-card

இவ்வகையில் பணமில்லா பரிவர்த்தனை தொடர்பான சந்தேகங்களை அறிந்து கொள்ள இலவச உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த இலவச உதவி எண் “14444”ஆகும்.

இ-வாலெட், ஆதார் மூலம் கட்டணம் செலுத்தும் விவரங்களை இந்த இலவச உதவி எண் மூலம் கேட்டறியலாம். நாஸ்காம் மென்பொருள் சங்கம் மற்றும் தொலை தொடர்புத் துறை இணைந்து இந்த இலவச எண்ணை அறிமுகம் செய்துள்ளது. நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் பயன்பாட்டில் இருக்கும் எனவும், விரைவில் நாடு முழுவதும் மற்ற மொழிகளில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் தொலை தொடர்பு துறை செயலாளர் தீபக் கூறியுள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பணமில்லா பரிவர்த்தனைக்கு இலவச உதவி எண்”

அதிகம் படித்தது