பத்தாம் வகுப்பு தேர்வில் 94.4 சதவீதம் தேர்வு
May 19, 2017
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது. இத்தேர்வில் மொத்தம் 94.4 சதவீதம் வெற்றி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 96.2 சதவீதமும், மாணவர்கள் 92.5 சதவீதமும் வெற்றி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 0.8 சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிக சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி மாணவிகள் 3.7 சதவீதம் தேர்ச்சி அதிகம் பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 10 லட்சத்து 38 ஆயிரம் பேரில் 9 லட்சத்து 26 ஆயிரத்து 711 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முழுத் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் 5059 ஆகும். தமிழில் 69 பேரும், கணிதத்தில் 13759 பேரும், அறிவியலில் 17481 பேரும், சமூக அறிவியலில் 61,115 பேரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் ஒருவரும் முழு மதிப்பெண் பெறவில்லை. இத்தேர்வில் திருநங்கை ஒருவரும் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “பத்தாம் வகுப்பு தேர்வில் 94.4 சதவீதம் தேர்வு”