நவம்பர் 26, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

பயிர்கள் கருகியதால் ஒரே நாளில் 5 விவசாயிகள் மரணம்Dec 30, 2016

பருவமழை பொய்த்துப் போனதாலும், காவிரியிலிருந்து கிடைக்கவேண்டிய தண்ணீர் கிடைக்காததாலும் காவிரி டெல்டா பகுதிகளில் நீர் இல்லாததால் பயிர்கள் காய்ந்து கருகி வருகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக விவசாயிகளின் தற்கொலை தொடர்ந்து வருகிறது.

siragu-farmer

இந்நிலையில் திருவாரூர் – வடுககுடியைச் சேர்ந்த 64 வயதான வெங்கடாசலம், கோவில்பட்டி – புதூரைச் சேர்ந்த பவுன்ராஜ் 67, உசிலம்பட்டி -பி.கண்ணியம்பட்டியைச் சேர்ந்த கருப்பத்தேவர், நாகை மாவட்டம் திருப்புகழுரைச் சேர்ந்த கண்ணன், வேளாங்கன்னியைச் சேர்ந்த பக்கிரிசாமி போன்ற ஐந்து விவசாயிகள் மரணமடைந்துள்ளனர். இதுவரை 50 விவசாயிகள் பலியாகியுள்ளனர். காவிரி டெல்டா பகுதியைச் சேர்ந்த விவசாயிகளே அதிகமாக உயிரிழந்துள்ளனர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பயிர்கள் கருகியதால் ஒரே நாளில் 5 விவசாயிகள் மரணம்”

அதிகம் படித்தது