பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் ஒரு இந்திய வீரர் பலி
Nov 21, 2016
காஷ்மீரின் உரி ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து இந்திய எல்லைப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் பகுதியில் உள்ள ராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டது. இத்தாக்குதலில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டு வருகிறது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைப்பகுதியில் மூன்று முறை தாக்குதல் நடத்தியுள்ளது பாக்., ராணுவம். இன்று பாகிஸ்தான் ராணுவம், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி செக்டரில் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் ஒரு இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை தலைமை காவலர் ராய்சிங் என்பவர் பலியானார். மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் ஒரு இந்திய வீரர் பலி”