செப்டம்பர் 19, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

தொகுப்பு கவிதை (பிஞ்ச செருப்பு!, எரிந்துபோன சரித்திரம்!)

ராஜ் குணநாயகம்

May 30, 2020

 

 பிஞ்ச செருப்பு!

siragu pincha seruppuசீனாவிடம்

கொள்ளை வட்டிக்கு கடன் வாங்கி

இந்தியாவிடம் வாங்கிய கடனையும்

உலக வங்கிக்கடனை

ஆசிய அபிவிருத்தி வங்கியிடம்

கடன் வாங்கியும்

கடன் வாங்கி

கடன் அடைத்தே

நாட்டையும்

எங்களையும்

ஓட்டாண்டியாயாக்கியதுதானே மிச்சம்..

சுதந்திரத்தின் பின்னான

எழுபது வருசங்களாய்..

ஆட்சியாளர்களே!

எங்கள் பிஞ்ச செருப்புக்களே சாட்சி!

————————————–

எரிந்துபோன சரித்திரம்!

Dec-23-2017-newsletter1

அரிய நூல்கள்

மாபெரும் நூலகம்

அறிவுப்பொக்கிசம்

தமிழரின் சரித்திரத்தை எரித்தே

சரித்திரம் ஒன்றை படைத்துவிட்டதாய்

எக்காளமிட்டது பேரினவாதம்!

புத்தகங்களை

நெஞ்சோடே அணைத்துக்கொண்டவர்களுக்கு

ஆயுதங்களை

கையிலே பரிசாய் தந்தார்கள்!

நெஞ்சில் வெஞ்சங்கொண்டு

எரித்தவர்களை

எரித்திடவே

வெகுண்டெழுந்தது தமிழினம்!

யார் இங்கே

வன்முறையாளர்கள்?

யார் இங்கே

இனவாதிகள்?

யார் இங்கே

பயங்கரவாதிகள்?

-ஈழன்-

 

 


ராஜ் குணநாயகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொகுப்பு கவிதை (பிஞ்ச செருப்பு!, எரிந்துபோன சரித்திரம்!)”

அதிகம் படித்தது