ஆகஸ்டு 17, 2019 இதழ்
தமிழ் வார இதழ்

பிரிவினைக்கு எதிராய்! (கவிதை)

இல. பிரகாசம்

Mar 3, 2018

அரசியல் உரிமை -(தோழிகள் இருவர் பேசிக்கொண்டது)

siragu pirivinaikku edhiraai2

 

தோழியடி எம்தோழி யடிநீ – நம்

தேச மெனும்சோ லையினுட் செல்வோம்.

 

மேரு மலைமீது ஆடுகின்ற மந்தி

சேரு தடிதம் கூட்டத் துள்ளே

கூறு போட பலபேர் உள்ளார்

நூறு நூறாய் இந்த நாட்டை

 

கடலாடி வந்த நுரைகரை ததும்புதடி

கரைகண்ட பின்னே அலையோடும் போச்சுதடி

கரைமீது மோதும் உமிழ்நீர் போல்சிலர்

கணந்தோ றும்பா ரதத்தில்வாழ் கின்றாடி

 

இமய மலைமுதல் தென்குமரி வரை

இயைந்து வாழ்கின்ற மக்களிடை யேநூறு

விதமாய் பிரிவினை ஆக்கிவைத் தாரடி

பிரிவினை யாலேநம் உரிமைதான் போச்சுதடி

 

உரிமை கெட்டுப் போனதன் பின்னே

ஊரு பேரும் நிலைச்சு போகுமோ?

உனக்கு என்றும் எனக்குஎன் றல்லாது

அரசியல் உரிமை முழுதாய் வேண்டுமடி


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பிரிவினைக்கு எதிராய்! (கவிதை)”

அதிகம் படித்தது