ஜூலை 4, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

பிள்ளை மொழிக்கு ஆராரோ!(கவிதை)

இல. பிரகாசம்

Dec 31, 2016

Siragu-ellaam-kodukkum-tamil1

அமுதம் சிந்தும் பிள்ளைத் தமிழே

                அமிழ்தாய் இனிக்கும் மழழை மொழியே

ஆராரோ பாடுவாயோ ஆரிரோ பாடுவாயோ

மழலை மொழியின் உரைநடை கவியே

மாதவர் போற்றும் கன்னித் தமிழினமே

                ஆராரோ பாடுவாயோ ஆரிரோ பாடுவாயோ

காப்பனிந்த பருவம் முதலேநீ பிதற்றும்

                குழறல் மொழயெல்லாம் கவிநடை ஆகாதோ?

ஆராரோ பாடுவாயோ ஆரிரோ பாடுவாயோ

                செங்கீரை ஆடுஞ் செம்மொழிக் குயிலே

ஆராரோ பாடுவாயோ ஆரிரோ பாடுவாயோ

                தாளமிடும் தாளப் பருவக் கிளியே

தளிர்நடை யிட்டு புதுத்தாள மிசைக்க

                ஆராரோ பாடுவாயோ ஆரிரோ பாடுவாயோ

புவனம் பெருமை கொள்ள பொன்னுடல்

                புவியில் தவழத் தவழ தாயாகி

மழையாக இசைச்சந்தம் தொடுக்க வான்துளிகளே

                ஆராரோ பாடுவீரோ ஆரிரோ பாடுவீரோ


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பிள்ளை மொழிக்கு ஆராரோ!(கவிதை)”

அதிகம் படித்தது