நவம்பர் 26, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

புதுச்சேரியில் இன்று(01.03.17) முதல் வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு தடைMar 1, 2017

தமிழ்நாடு மற்று புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற பொழுது, வெளிநாட்டு குளிர்பானகள் விற்கக்கூடாது, அவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என்று போராட்டத்தின்போது கோரிக்கை விடுத்தனர் மாணவர்கள்.

coke pepsi cans

இதையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் வெளிநாட்டு குளிபானங்களை விற்க மாட்டோம் என்று தமிழக வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா அறிவித்தார்.

தொடர்ந்து புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. அதில் வெளிநாட்டு குளிர்பானங்களான பெப்சி, கோக் உள்ளிட்ட குளிர்பானங்கள், 25000 கடைகளிலும் விற்கப்படுவதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி இன்று முதல் புதுச்சேரியில் வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்கப்படவில்லை.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “புதுச்சேரியில் இன்று(01.03.17) முதல் வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு தடை”

அதிகம் படித்தது