ஆகஸ்டு 8, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

புரட்சி எங்கும்!, தீயின் சிறகொன்று (கவிதை)

இல. பிரகாசம்

Mar 10, 2018

புரட்சி எங்கும்!

siragu periyaar1

சிலைத கர்ப்பு செய்தார் பகைவர்
செயல்ப டும்காலம் இதுவென காட்டினார்
திரிபுரா மராட்டா கேரள வங்கம்
தென்தமிழ் நாடென எங்கும் புரட்சி!

பொதுவுடமை சிலைதனை தகர்த்தார் மக்கள்
பொறுமை இழந்ததனை கண்டோம்! லெனின்
புகட்டிய பொதுவுடமை தீயாய் பரவியது!

பகுத்தறிவு மேதை பெரியார் சிலைதனை
பகைகொண்டு சிதைத்தார் சாதி மக்களின்
பகையென உணர்ந்தார் புரட்சி பரவியது!

சிந்தனைச் சிற்பியின் சிலைதனை சிதைத்தார்
சீறிய உணர்வுடன் சினந்தான் பொங்கிற்று
பாசிச ஆட்சியை அழிக்கும் போர்இதோ!

தீயின் சிறகொன்று
(குறும்பாக்கள்)

siragu--theeyin-siragu1

தீயின் சிறகொன்றில் பட்டு
தன்முடிவை எழுதிக் கொண்டிருக்கிறது
மெல்லிய பூப்போன்ற சிறகொன்று

ஆற்றில் வற்றிய நீர்போல்
எங்கும்    வெறுமை அப்பிக்கிடக்கிறது
ஆற்றொனாத் துயரத்தின் தனிமை.

கடிகார முள்ளின் மீது
கருணையற்ற மிருகத்தின் பார்வை
நம்பிக்கையற்ற என் இரவுகள்.


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “புரட்சி எங்கும்!, தீயின் சிறகொன்று (கவிதை)”

அதிகம் படித்தது