மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

புவியை வெப்பமாக்கி அழிவைத் தேடும் மனிதம்

ஆச்சாரி

Oct 15, 2013

60 கோடி ஆண்டுகளுக்கு முன்பு எரிகற்கள் விழுந்து  பூமியின் 60 சதவீத உயிரினங்கள் மொத்தமாக அழிந்தன. இதன் பிறகு உலகை அச்சுறுத்தும் விளைவாக புவி வெப்பமடைதல் பாதிப்புகள் உருவாகின. அன்று நாம் வெளியிடும் கார்பன்டை- ஆக்சைடை உட்கொள்ளவும், நாம் உட்கொள்ளும் ஆக்சிஜனைக் கொடுக்கவும் ஏராமளமான தாவரங்களும், மரங்களும் இருந்தன. இதனால் அன்று புவியில் ஒரு இயற்கைச் சமநிலை இருந்தது.

ஆனால் தற்காலத் தவறான செயல்பாடுகளால் இயற்கையைப் பாதிக்கின்ற “பசுமைக் குழல் வாயுக்களான கார்பன்-டை-ஆக்சைடு CO2, மீத்தேன் CH4,  நைட்ரஸ் ஆக்சைடு N2O, ஹைட்ரோ புஃளோரோ கார்பன் HFCS, பெர் ஃபுளோரோ கார்பன்  PFCS,  சல்பர் ஹெக்சா ஃபுளோசைடு SF6  போன்ற வாயுக்கள் சூரியனிலிருந்து வரும் கதிர் வீச்சுக்களை எந்தத் தடையம் இன்றி உட்செலுத்தியும், பூமி எதிரொலிக்கும் வெப்பத்தை வெளிவிடாமல் செய்வதால்தான் இந்தப் புவி, வெப்பம் அடைகிற விளைவு ஏற்படுகிறது.

இந்த வாயுக்கள், மக்கள் தொகைப் பெருக்கத்தினாலும், இதன் மூலமாக மனிதர்களிடையே அதிகரித்து வரும் மின்சாரப் பயன்பாடு, இதன் விளைவால் எரிக்கப்படும் நிலக்கரி, மற்றும் எரிபொருட்களினால் வெளியேற்றப்படும் வாயுக்களாலும், மனிதர்கள் பயன்படுத்தும் வாகன பயன்பாடுகளும், இதனால் வெளிவரும்  வாயுக்களும், இயற்கையில் மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் மூலமாக வெளிப்படும் மீத்தேன் எனும் வாயுவினாலும் காடுகள் அழிக்கப்படுவதாலும், செயற்கை உரங்களின் பயன்பட்டாலும், அதிகமான பிளாஸ்டிக் மற்றும் மிண்ணணுக் கழிவுகளாலும் இந்தப் பசுமைக் குடில் வாயுக்கள் அதிகமாகத் தோன்றுகிறது.

ஒரு காலகட்டத்தில் மக்கள் தொகை அதிகம் பெருகிவிட்டதனாலும், வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு உலகெங்கும் தொழிற்புரட்சி ஏற்பட்டதின் விளைவாக மனிதனின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டது. அதே வேளையில், மறுபுறம் சுற்றுச்சூழல் மாசுபட்டு இயற்கையானது பின்னடைவைச் சந்தித்தது இதனால் காடு.களின் பரப்பளவு குறைந்து வருகிறது

ஒரு நாட்டின் வளத்திற்கு 33% நிலப்பரப்புக் காடுகள் தேவை. ஆனால் இந்தியாவில் 22% மட்டுமே காடுகள் வளம் பெற்றுள்ளது. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 6,78,333 ச.கி.மீ மட்டுமே காடுகள் உள்ளது. இதில் திறந்தவெளிக் காடுகள் 2,87,769 ச.கி.மீ பரப்பளவும், அடர்த்தி குறைந்த காடுகள் 3,39,279 ச.கி.மீ பரப்பளவும், அடர்த்தி மிகுந்த வனங்கள் 51,285 ச.கி.மீ பரப்பளவு மட்டுமே உள்ளது.

இதில் தமிழகம் தன் பங்காக எல்லைப் பிரிவினையின் போது இடுக்கி (கேரளா), திருப்பதி போன்ற வனப்பகுதிகளை இழந்து 17% மட்டுமே வனப்பகுதியைப் பெற்றுள்ளது. இது தன் மொத்த நிலப்பரப்பான 1,30,058 ச.கி.மீட்டரில் 23,643 ச.கி.மீ சுற்றளவு வனப்பகுதியை மட்டுமே பெற்றுள்ளது. இதில் திறந்த வெளிக்காடுகள் 10,636 ச.கி.மீ பரப்பளவும், அடர்த்தி குறைந்த காடுகள் 9,567 ச.கி.மீ பரப்பளவும், அடர்த்தியான காடுகள் என வெறும் 2,440 ச.கி.மீ பரப்பளவு மட்டுமே பெற்று இந்திய அளவில் தமிழகம் 14 வது இடத்தில் உள்ளது. அதனால் இன்றைய சூழலைக் கருத்தில் கொண்டு மரம் வளர்த்து, வனத்தின் பரப்பளவை அதிகப்படுத்த வேண்டும். இதற்கு அரசின் செயல்பாட்டோடு  தனி மனித முயற்சியும் அவசியம்.

ஆனால் தற்போது தமிழ் நாட்டில் கட்டிடம் கட்டுகிறோம் என்ற பெயரில் அரசு நிலங்களையம், தரிசு நிலங்களையும், புறம்போக்கு நிலங்களையும் பண முதலைகள் மொத்தமாக வாங்கி, விற்பனை செய்யும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் இயற்கை வளம் அழிவதோடு, பசுமைக் காடுகளாய் இருந்த பகுதிகளை கான்கிரீட் காடுகளாய் மாற்றும் முனைப்புடன் இவர்கள் செயல்படுவது  புவி வெப்படைவதற்கு வழிவகுக்கும் செயலாகும்.

கடந்த சில ஆண்டுகளாக பூமியானது கொடும் வெப்பத்திற்குள்ளாகி இருப்பதால் கடும் மோசமான பின் விளைவுகள் ஏற்படும் என சுற்றுச்சூழல் குழுமங்களும், உலக தட்ப வெப்ப அமைப்பும் வலியறுத்தி வருகின்றன. கடந்த 50 ஆண்டுகளில் மனிதர்களின் தவறான செயல்பாடுகள் தான் புவி வெப்பமடைவதற்கு அதிகமான பங்காற்றியுள்ளன. 1950களிலிருந்து தீவிரமான வெப்பநிலை, தீவிரமான குளிர் என அடிக்கடி மாறி மாறி தட்பவெப்ப நிலை இருந்து வந்துள்ளது.

வடக்கு மற்றும் மத்திய ஆசியாவில் உலக சராசரி விகிதத்தை விட 40% அதிகமான வெப்பநிலை பரவுகிறது. 20ஆம் நூற்றாண்டில் இருந்ததை விட இப்போது 1020 செ.மீ கடல் மட்டும் உயர்ந்துள்ளது. 2100 –ம் ஆண்டில் 988 செ.மீ வரை உயரும் பாதிப்புகள் இருக்கிறதென்று விஞ்ஞானிகள் அறிவுறுத்துகின்றனர். மேலும் துருவ பகுதிகளில்  பனிக்கட்டி உருகுவதாலும் கடல் மட்டம் உயரும் வாய்ப்பு இருக்கிறதென்று இயற்கை ஆர்வலர்கள் அறிவித்துள்ளனர்.

புவி வெப்பமடைவதால் உண்டாகும் விளைவுகள்:

1. காஷ்மீர் பகுதியிலுள்ள லடாக்கில் காணப்படும் பனியாறுகள் ஒவ்வொரு ஆண்டும் 50 முதல் 100 அடி குறைந்து வருகிறது.

2. இமயமலையில் உள்ள 3300 பனிப்பாறைகளில் 2300 பனிப்பாறைகளும் உருகி கங்கை, பிரம்மபுத்திரா நதிகள் வற்றிப்போகும் அபாயம் உள்ளது.

3. சிமெண்ட் தொழிற்சாலையில் 1 கிலோ சிமெண்ட் உற்பத்தி செய்யப்படும் போது 200 கிராம் co2 வெளி வருகிறது. 1மூட்டை தயாரிக்க 10 கிலோ கிராம் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளிவருகிறது. உலக அளவில் 5 சதவீதம் சிமெண்ட் தொழிற்சாலைகள் co2 வெளியிடுவதால் புவி வெப்பமடைகிறது.

4.  புவி வெப்பமடைதல், உடல் சூடு, நீரிழப்பு போன்ற நோய்கள் உண்டாகி 2003 -ல் 70000 நபர்கள் இறந்துள்ளனர்.

5.     பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் ஆகிய நிகழ்வுகளால், ஆற்றல் உற்பத்தியில் பெரும் தாக்கம் ஏற்படுத்துகிறது. இன்னும் 50 ஆண்டுகளில் புதைபடிவ எரிபொருளும் 70 ஆண்டுகளில் நிலக்கரி ஆற்றல் பூமியிலிருந்து கிடைக்காமல் வெறுமையாக்கப்படும்.

6.  புவி வெப்பமடைவதால் சமீப Satellite Image படப்பிடிப்பில் ஓசோன் மண்டலம் 97 இலட்சம் சதுர மைல்கள் வெற்றிடமாகியுள்ளது என தெரிய வந்துள்ளன.

7. The Clean Energy Act ஆஸ்திரேலியாவில், கரியமில வாயு கட்டுப்பாட்டு மசோதா நிறைவேற்றியுள்ளது. அதிக அளவ கரியமில வாயுவை வெளியிடும் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விடக் கூடுதலாக வெளியிடும் கரியமில வாயுவுக்கு 1 டன்னுக்கு 23.80 டாலர் என்ற வீதத்தில் வரி கட்ட வேண்டும். 2020க்குள் வெளியிடப்படும் கரியமில வாயுவில் 16 கோடி டன் வாயுவைக் குறைக்க வேண்டும் இந்த அரசு அறிவுறுத்தி உள்ளது.

8. மேற்கு வங்கத்தில் உலகின் பெரிய அலையாத்திக் காடுகள் கொண்டதாகவும், வங்காளப் புலிகளின் வீடாகவும், பல அரிய தாவர மற்றும் உயிரினங்களை ஒன்றுடன் ஒன்று சார்ந்து இருப்பிடமாகக் கொண்டதாகவும், இந்தியாவின் முக்கிய சூழலியல் ஒன்றானதுமான சுந்தரவனக் காடு திகழ்கின்றது. காலநிலை மாற்றத்தினால் அதிகரித்து வரும் கடல் நீர் மட்டமானது சுமார் 18500 ஏக்கர் அலையாத்திக் காடுகளை விழுங்கி விட்டது.

9.  ஆண்டுதோறும் 3.14 மில்லி மீட்டர் கடல் மட்டம் உயர்ந்து வருவதாக சமுத்திர ஆராய்ச்சி மையம் (Sea Research Centre) அறிவித்துள்ளது.

10. அதே போன்று ஆண்டுதோறும் .019 சென்டி கிரேடு வெப்பநிலை கூடுதலாகி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

11.     ஒரு காலத்தில் இந்தியாவில் 1000 தீவுகள் இருந்தன. 10 ஆண்டுகளுக்கு முன் 3 பெரிய தீவுகள் கடலில் மூழ்கி விட்டன. தற்போது 400 தீவுகள் மீதமுள்ளன.

12. மரங்களை வெட்டி, வனங்களை அழிப்பதால் நிலத்தின் மேற்பரப்பிலுள்ள நல்ல சத்துள்ள மண் அரிக்கப்பட்டு, 12000 மில்லியன் டன்கள் வளமான மண் மழையாலும், காற்றாலும் அரித்துச் சென்று வீணாகக் கடலில் கலக்கிறது, மேலும் சிக்குன் குனியா, ஸ்வைன்புளு, டெங்கு காய்ச்சல் போன்ற வியாதிகள் பரவுகின்றன.

13. ஆண்டுக்கு 200 மில்லியன் டன் கார்பன் மோனாக்சைடும், 50 மில்லியன் ஹைட்ரோ கார்பனும், 150 மில்லியன் டன் சல்பர் டை ஆக்சைடும், 190 மில்லியன் டன் சாம்பலும் காற்றில் கலந்து ஓசோன் பகுதியினை ஓட்டையாக்குகின்றன.

14.  மனிதன் கவலைப்படுகிறானோ இல்லையோ இந்த மாபெரும் ஆபத்தை எண்ணி மலைச்சிகரங்கள் மட்டும் தனித்தனியே அழுதுக் கொண்டிருக்கின்றன. கூடிக்கொண்டே போகிறது புவி வெப்பம். ஒரு டிகிரி வெப்பம் கூடியதற்கே மென் சிறகு கொண்ட சில பறவை இனங்களும் கம்பளித்தோல் கொண்ட சில விலங்கினங்களும் பூமியை விட்டே போய்விட்டன.

15. புவி வெப்பத்தால் ஒரு மணி நேரத்திற்கு ஓர் உயிரினம் அழிந்து கொண்டே இருக்கிறது. இன்னும் மூன்று டிகிரி வெப்பம் கூடினால் போதும், உலகின் 33 விழுக்காடு விலங்கினங்கள் அழிந்துபோகும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

16. ஆர்கன் சாஸ் மாநிலத்தில் தலைக்கு மேலே பறந்த 5000 பறவைகள் பொத்தென்று தரையில் விழுந்து செத்தொழிந்த காட்சியை இப்போதும் இணைய தளத்தில் பார்க்கலாம்.

17.        பருவங்களை ஏமாற்றி திடீரென வெப்பம் கூடிப்போன ரஷ்யாவில் சூடு தாங்காமல் நீராடப்போன பலர் நீர் நிலைகளிலேயே செத்து மிதந்ததை உலகறியும்.

18.        சரிந்து கிடந்த பொதிகளைப் போல் விஸ்கான்சின்  நகரத்தில் ஒரே நேரத்தில் இறந்து கிடந்தன சில நூறு பசுக்கள்.

19.  புவி வெப்பத்தால் மெக்ஸிகோ வளைகுடாவில் இறந்து, எண்ணற்ற பிராணிகள்  கரை ஒதுங்கின.

20. கென்ய மலைப்பகுதிகளில் உள்ள மிகப்பெரிய பனிமலையில், இதன் எடையில் 92 % குறைந்து விட்டது.

21.   ஆர்டிக் பகுதிகளில் பனியின் தடிமன் 40 % குறைந்துள்ளது.

22. ஒரு ஆய்வறிக்கையில் இன்னும் நூறு ஆண்டுகளில் முன்னூறு கோடி மனிதர்கள் இடம் பெயர்வதற்க்கான சாத்தியக் கூறுகள் 91 % இருப்பதாக சொல்கிறது. உணவுத்தட்டுப்பாடும் அதிகளவு ஏற்படுமாம்.

23.   விஞ்ஞானிகள் கூற்றுப்படி இனி வரும் காலங்களில் வழக்கத்திற்கு மாறான கடுமையான புயல்களும், இதன் விளைவாக கடுமையான சூறாவளிக் காற்றும் இருக்கும். இந்த விளைவால் நேர்முகமாகவும், மறைமுகமாகவும் ஒவ்வொரு ஆண்டும் மூன்று லட்சம் மனிதர்கள் இந்த விளைவினால் உயிரிழந்து வருவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

24.  wwf ஆய்வறிக்கையின் படி 2100 ஆம் ஆண்டிற்குள் கடலில் உள்ள பவளப் பாறைகள் முற்றிலுமாக அழியக்கூடும். அவ்வாறு நேர்ந்தால் அது கடல் வாழ் உயிரினங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என அறிவுறுத்தப்படுகிறது.

புவி வெப்பமடைவதைக் குறைக்க:

• ஒரு அறையில் எவரும் இல்லாத போது இயங்கும் மின் விசிறிகள், குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி போன்ற இயந்திரப் பொருட்களின் இயக்கத்தை அனைத்துவிட வேண்டும்.

•   இன்றைய சூழலில் குண்டுப் பல்புகளுக்குப் பதில் சி.எப்.எல் (CFL) பல்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் 70 சதவீதம் வரை மின்சாரச் செலவைக் குறைப்பதோடு வீண் வெப்பமயமாவதைத் தடுக்கலாம்.

• மரங்கள் co2 கார்பனை எடுத்துக்கொண்டு உயிர்வாழத் தேவையான உணவு, ஆக்சிஜன், நீர் போன்ற பொருட்களை ஒளிச்சேர்க்கை மூலம் கொடுக்கின்றன என்பதை அறிவோம். அதே சமயம் புவி வெப்பமடைவதற்குக் காரணமான co2 ஐ எடுத்துக் கொண்டு காற்று மண்டலத்தைச் சுத்தம் செய்யும் வேலையையும் செய்கிறது. co2 ஐ எடுத்துக் கொண்டு காற்று மண்டலத்தைக் குறைக்கும் ஒவ்வொரு மாதத்திற்கும் ஐ.நா -வில் பணம் கொடுத்து ஊக்குவிக்கிறார்கள். இதைத்தான் Carbon Trading என்கிறோம். ஒவ்வொரு மரமும் அந்தந்த அளவிற்குத் தகுந்தாற்போல் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு 500 டன் கார்பன்-டை-ஆக்சைடை எடுத்துக்கொள்கிறது. அதனால் மரத்தின் நன்மையை உணர்ந்து அனைவரும் மரம் வளர்த்தலை ஊக்கப்படுத்தி நாம் செயல்பட வேண்டும். மேலும் மரங்கள் வெட்டுவதையும் நிறுத்துவதோடு பிறரையும் தடுத்து நிறுத்த வேண்டும்.

• செம்மறி ஆடுகளிள் ஏப்பம், புவிவெப்பத்தைத் தடுப்பதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் செம்மறி ஆடுகள் கூட்டுறவு ஆராய்ச்சி மைய ஆய்வுக்குழு இதைக் கண்டுபிடித்துள்ளது. பசுமை இல்லா வாயுக்களின் உமிழ்வை கட்டுப்படுத்துவதால் சில விலங்கினங்கள் நமக்கு உதவுகின்றன. குறிப்பாக மீத்தேன் வாயுவை கட்டுப்படுத்துவதில் இவை பங்காற்றுகின்றன.

• மாடுகள், இந்தப் பணியில் உதவுவதாக ஏற்கனவே அறியப்பட்டு இருந்தது. தற்போது அப்பட்டியலில் செம்மறி ஆடுகளும் சேர்ந்துள்ளன. செம்மறி ஆடுகளின் குடல் பகுதியில் வாழும் நுண்ணுயிரிகள் மீத்தேன் வாயுவை அதிகமாக கிரகிக்கின்றன. குறிப்பாக ஆடுகள் ஏப்பமிடும் சமயத்தில் அதிகப்படியான மீத்தேன் உள்ளிழுக்கப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட அளவு காற்றில் மீத்தேன் அளவு உறிஞ்சப்படுவதால் புவி வெப்பமடைவது தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஆஸ்திரேலியா அரசு ஆடுமேய்க்கும் இடையர்களை ஊக்குவித்து வருகிறது.

• 1. தண்ணீர் சிக்கனம், 2. மின்சாரச் சிக்கனம், 3. எரிபொருள் சிக்கனம், 4. பிளாஸ்டிக் உபயோகக் குறைப்பு என இந்த நான்கையும் பின்பற்றினாலே ஓரளவு புவி வெப்பமடைவதைத் தடுக்கலாம்.

•ஆகையால் கார்பனை உள்வாங்கும் இடங்களான காடுகளை மீண்டும் உருவாக்குவதே கரியமில வாயுவைக் குறைக்கும் ஒரே வழியாகும் என விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். இருந்தாலும் இங்கு பணம் பண்ணுவதையே குறிக்கோளாகக் கொண்ட முதலாளிகளுக்கு இதனை யார் கூறுவது? இயற்கையைப் பாதுகாக்க வேண்டிய அரசுக்கு இது பற்றி இம்மியும் கவலை இல்லை. ஏனென்றால் இவர்களுக்கு வேண்டியது முதலாளிகளின் பணமும், தேர்தலின் போது அவர்களின் ஆதரவும் தான். பிறகு எப்படி பெரும் முதலாளிகளைக் கட்டுப்படுத்த முடியம்? அதனால் இக்காலச் சூழல் அறிந்து அரசும், தனியார் முதலாளிகளும், பொதுமக்களும் முடிந்தவரை இயற்கையை அழிக்காமல் வளர்ப்பதையே நம் நோக்கமாகக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இதற்கான பலனை நம் பின்னால் வரும் குழந்தைகள் அனுபவிப்பார்கள் என்பதை எவரும் மறந்துவிடக்கூடாது.

Another reason to get motivated to study is that you will enjoy http://essaysheaven.com a better quality of life as an educated person

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “புவியை வெப்பமாக்கி அழிவைத் தேடும் மனிதம்”

அதிகம் படித்தது