டிசம்பர் 3, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

பூண்டின் மருத்துவ குணங்கள்

சிறகு நிருபர்

Aug 15, 2020

siragu garlic1
1. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூண்டை தொடர்ந்து சேர்த்துக்கொள்வதால் உடல் எடை குறையும்.
2. உடலில் சக்தி மற்றும் வியர்வையை அதிகரிக்கும் திறன் கொண்ட பூண்டு தாய்ப்பாலை விருத்தி செய்கிறது.
3. பசியின்மை மற்றும் அஜீரணத்தைப் போக்கக்கூடிய பூண்டு நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.
4. மனஅழுத்தத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய பூண்டு சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது.
5. பூண்டை தினமும் சேர்த்துக்கொள்வதால் மாதவிலக்கு கோளாறுகளை சரிசெய்கிறது, மூட்டுவலியைப் போக்குகிறது.
6. உணவில் பூண்டை சேர்த்துக்கொள்வதால் வாயுத்தொல்லை நீங்குகிறது.
7. இருமல், சளி போன்றவற்றை குணமாக்குகிறது பூண்டு.
8. தொண்டைப் புண்களை குணமாக்கும் பூண்டு காது மற்றும் காது சார்ந்த உறுப்புகளில் ஏற்படும் தொற்றை நீக்கி வலியை போக்குகிறது.
9. தினம் ஒரு பல் பூண்டு உண்டு ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தி வர முகத்தில் ஏற்படும் பருக்கள் மறையும்.
10. தினம் ஒரு பல் பூண்டு உண்டு சாப்பிட்டுவர வயிற்றில் இருக்கும் புழுக்களை அழித்து விடுகிறது.
11.  கர்ப்பிணி பெண்களுக்கு இது பாதுகாப்பற்ற உணவு, மற்றும் சிலருக்கு பூண்டு சேரவில்லை என்றால் அலர்ஜி ஒவ்வாமை பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவ்வாறு இருக்குமானால் இதை தொடர்ந்து சாப்பிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.


சிறகு நிருபர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பூண்டின் மருத்துவ குணங்கள்”

அதிகம் படித்தது