பெட்ரோல் பங்குகளில் பணமில்லா பரிவர்த்தனை செய்வோருக்கு சேவை வரி இல்லை
Feb 27, 2017
சென்ற வருடம் நவம்பர் 8ம் தேதி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெற்றது மத்திய அரசு. இதைத் தொடர்ந்து பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவித்து வந்தது மத்திய அரசு.
பெட்ரோல் பங்குகளில் பணமில்லா பரிவத்தனையை துவக்குமாறு பெட்ரோலிய அமைச்சகம் எண்ணெய் நிறுவனங்களை கேட்டுக்கொண்டது. அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 4750 பெட்ரோல் பங்குகளில் பணமில்லா பரிவத்தனைக்கான வசதி அமைக்கப்பட்டது.
வங்கிகள் கூறியபடி பணமில்லா பரிவர்த்தனை செய்வோருக்கு 0.25 முதல் 1 சதவிகிதம் வரை சேவை கட்டணம் வசூலிக்கப்பட்டது. பின் சேவைக் கட்டணத்தை யார் கட்டுவது என்ற குழப்பம் நீதிக்கவே தற்காலிகமாக சேவை கட்டணத்திற்கு தடை விதித்தது மத்திய அரசு.
பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் ஆகிய நிறுவனங்கள் சேவை கட்டணத்தை செலுத்துவதாக தெரிவித்தது. எனவே பெட்ரோல் பங்குகளில் பணமில்லா பரிவர்த்தனை செய்வோர் சேவை கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இதன் அதிகார அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “பெட்ரோல் பங்குகளில் பணமில்லா பரிவர்த்தனை செய்வோருக்கு சேவை வரி இல்லை”