அக்டோபர் 23, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

பெட்ரோல் பங்க் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படும்May 9, 2017

மே 14ம் தேதி முதல் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க்கிற்கு விமுறை விடப்படும் என்று தமிழகம் பெட்ரோல் டீலர்கள் சங்கக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

Siragu Petrol

இதே போன்று புதுச்சேரி, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் பெட்ரோல் பங்க்கிற்கு ஞாயிறு விமுறை விடப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் விடுமுறை விடப்படும் பெட்ரோல் பங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது.

இதனையடுத்து தமிழகத்தில் உள்ள பெட்ரோல் பங்குகள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படும் என்று தமிழக பெட்ரோல் டீசல் விற்பனையாளர் சங்க தலைவர் முரளி கூறியுள்ளார். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் வேண்டுகோளை ஏற்று இம்முடிவு எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பெட்ரோல் பங்க் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படும்”

அதிகம் படித்தது