மே 14, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்May 17, 2017

மத்திய அமைச்சரவையில் இன்று(17.05.17)பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்பில் கொண்டு வரப்பட்ட திட்டத்திற்கும் ஒப்புதல் அளித்துள்ளது மத்திய அமைச்சரவை.

Siragu first babyஅதன்படி ஜனனி சுரஷா யோஜாவின் கீழ் முதல் குழந்தையை பெற்றெடுக்கும் பெண்களுக்கு ஆறாயிரம் பரிசு வழங்கப்படும் என்றும், பிரசவித்த மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு உதவித்தொகையாக ஐந்தாயிரம் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் தொகையை மூன்று தவணைகளாக அப்பெண்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது. அசாம் மாநிலத்தில் இந்திய வேளாண் கழகம் அமைப்பதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக 587 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்”

அதிகம் படித்தது