பெற்றோர்கள் நடத்தும் திருமணங்கள் ஒழிய வேண்டும் – தந்தை பெரியாரின் பார்வை!
வழக்கறிஞர். ம. வீ. கனிமொழிJul 25, 2020
மேல்நாட்டில் ஒருவனைப் பார்த்து உன் மகளுக்கு எப்போது திருமணம் என்று கேட்டால், ஏன்என்னைக் கேட்கிறாய் என் மகளைக் கேள் என்பான். உன் மகனுக்கு எப்போது கல்யாணம் என்றால், அவனைக் கேள் என்பான்.
அதற்கு என்ன பொருள் என்றால் திருமணம் என்பது திருமணம் செய்து கொள்ளவேண்டிய ஓர்ஆணோ, ஒரு பெண்ணோ முடிவு செய்து கொள்ளவேண்டிய விஷயம். நம் நாட்டில் என்னவென்றால், திருமணம் என்பது பெற்றோர்கள் பார்த்துச் செய்யவேண்டிய சடங்காகி விட்டது. இது ஒழிந்தாக வேண்டும்.
மணமக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் கோவிலுக்கோ, குளத்திற்கோ, குப்பைத் தொட்டிக்கோ போகக் கூடாது. வேண்டும் என்றால், வெளி மாநிலங்களுக்கோ வெளி நாட்டிற்கோ சென்று சுற்றிப் பார்த்து உலக அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். சிறீரங்கத்திற்கோ, காசிக்கோ சென்றால் எதைப் பார்க்க முடியும்? அந்த அழுக்குருண்டை சாமியைத் தானே பார்க்க முடியும்? இதனால் கடுகளவு முன்னேற்றமாவது ஏற்படுமா? என்பதைச் சிந்திக்க வேண்டும். என்று 1971 இல்மாப் படுகைத் திருமண விழா உரையில் குறிப்பிட்டார் தந்தை பெரியார்.
வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “பெற்றோர்கள் நடத்தும் திருமணங்கள் ஒழிய வேண்டும் – தந்தை பெரியாரின் பார்வை!”