பேன் தொல்லையைப் போக்க வழிமுறைகள்
சிறகு சிறப்பு நிருபர்Sep 10, 2016
1. துளசி இலையை நன்றாக அரைத்து, தலையில் தடவி சிறிது நேரம் ஊறவைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரில் தலையைக் கழுவினால், பேன்கள் இறந்து உதிர்ந்துவிடும். கூந்தலும் நன்றாக வளரும்.
2. 100 கிராம் தேங்காய் எண்ணெயில், 50 கிராம் வேப்பம்பூவை போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். அந்த எண்ணெயைத் தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணி நேரம் ஊறவைத்துக் குளித்தால் பேன் தொல்லை குறையும்.
3. பேன் தொல்லைப் போக்குவதில் குப்பை மேனி கீரை முக்கியப் பங்கு வகிக்கிறது. குப்பை மேனி இலையை எடுத்து சாறு எடுத்து தலையில் அரை மணி நேரம் ஊற வைத்து பின்னர் குளிக்க பேன் தொல்லை நீங்கும்.
4. தேங்காய் எண்ணெயுடன் சிறிது வெங்காயச் சாற்றை பிழிந்து தலையில் தேய்த்து ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனால் பேன் முற்றிலும் அழிந்துவிடும்.
5. தேங்காய் எண்ணையை காய்ச்சி, அதில் நிழலில் உலர்த்தி காய்ந்த கருவேப்பிலையை சேர்த்து காய்ச்சி தலையில் தடவி வந்தால்பேன் வரவே வராது.
6. வசம்பை அரைத்து தலையில் தடவி, பிறகு அரைமணிநேரம் கழித்து குளித்து வந்தால் பேன் தொல்லை அகலும்.
7. இரவு தூங்கும் போது மருதாணிப் பூவை தலையில் வைத்து கொண்டால் பேன் தொல்லை நீங்கும்.
8. சீத்தாப்பழ விதைகளைக் காயவைத்து பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். சீயக்காயில் சிறிதளவு தயார் செய்த பொடியைக் கலந்து தலையில் தேய்த்துக் குளித்துவந்தால் ஈறு, பேன் தொல்லை குறையும்.
9. சிறிதளவு வினிகரை இரவில் தலையில் தடவி துணியால் சுற்றி கட்டி காலையில் தலைக்குக் குளித்தால் பேன் தொல்லை நீங்கும்.
10. தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூரத்தை சேர்த்து முடியில் தடவினால் பேன் அகலும்.
11. வெந்தயத்தை அரைத்து தலையில் தேய்த்து, பின் கற்பூரம் கலந்த நீரில் குளித்தால் பேன் தொல்லை நீங்கும்.
12. நன்கு புளித்த தயிரை தலைக்குத் தடவி, அரை மணிநேரம் நன்கு ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு கூந்தலை அலசினால், தலையில் இருக்கும் பேன் மற்றும் பொடுகு போய்விடும்.
சிறகு சிறப்பு நிருபர்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “பேன் தொல்லையைப் போக்க வழிமுறைகள்”