பொங்கலோ பொங்கல்(கவிதை)
செல்வக்குமார் சங்கரநாராயணன்Jan 16, 2016
“கொட்டுங் கும்மி சேர்ந்தாட
குலவைப் பாட்டு கொண்டாட
மஞ்சள் நீர் தெருவோட
மகிழ்ந்து நாம் திண்டாட
புதுப்பானைப் பொங்கலிட
புது இன்பம் பொங்கியோட
நாவிற் கரும்புச் சுவையாட
சல்லிக்கட்டுக் காளையோட
காளையரதை விரட்டியோட
பொங்கலொடு போயிராதாம்
மாட்டுக்கொன்றும் தனியாய்
பிறகு வள்ளுவரை வாழ்த்திப்
பாடும் தமிழர் வழி மரபாம்
உடன் தமிழெங்கள் உயிராம் !”
செல்வக்குமார் சங்கரநாராயணன்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “பொங்கலோ பொங்கல்(கவிதை)”