மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பொங்கல் திருநாள் (கவிதை)

இல. பிரகாசம்

Jan 13, 2017

Siragu-pongal6

செங்கரும்புச் சுவைதேறும் செந்தமிழர் புதுப்
பொங்கள் நன்நாள் மலர்ந்தது!-எங்கும்
புதுப்பொலி வுடனேஉழுவார் உள்ளம் எல்லாம்
புத்துணர் வுடனே ஒருவருக் கொருவர்
பொங்கல் நல்வாழ்த்துக் கூறி மகிழ்ந்தனர்
மங்கள மஞ்சள் வீட்டினை அணிசெய்ய

மங்கையர் மங்களமஞ்சள் முகமும் பொலிந்தன
தங்கநெல் அணிமணிக் குவியல் வாசல்
தேங்கி நிற்கும் அழகைக் கண்டு
பொன்னிறக் கதிரவன் “உழுவார் வாழ்வு
பொன்னாய் சிறக்க”வென வாழ்த்துக் கூறவும்
பச்சரிசியுங் கட்டிவெல்லப் பாகும் மிகுநறும்
நெய்யும்பாலும் பொங்க பிறந்தது பொங்கல்!


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பொங்கல் திருநாள் (கவிதை)”

அதிகம் படித்தது