போகி, பொங்கல் (கவிதை)
நா.தீபாசரவணன் உதவிப்பேராசிரியர் ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி,கோவை.Jan 13, 2018
வறுமையைப் போக்கி !
துன்பத்தைப் போக்கி !
துயரத்தைப் போக்கி !
கோபத்தைப் போக்கி !
போக்கிபோக்கி
போகிகொண்டாடும் இத்தருணத்தில்
நடந்ததை நினைக்க வேண்டாம் !
இழந்ததைதேட வேண்டாம் !
தொலைத்ததை எண்ண வேண்டாம் !
எண்ணியதை மறக்க வேண்டாம் !
தைப்பொங்கல் திருநாளில்
வெண்பொங்கல் பொங்க–வாழ்க்கையில்
வெளிச்சமுண்டாகட்டும்.
மஞ்சள் மணக்கவாழ்வு
மங்களகரமாகட்டும்.
கரும்பு இனிக்க–வாழ்வில்
கவலைகள் மறையட்டும்.
பூக்கள் கமகமக்க வாழ்க்கையில்
புன்னகை மலரட்டும்.
மாக்கோலம் பளபளக்க வாழ்வில்
மாபெரும் வெற்றியுண்டாகட்டும்.
சர்க்கரைப் பொங்கல் இனிக்க–வாழ்வில்
சந்தோசம் மலரட்டும்.
ஞாயிறின் வரவால் வாழ்வு
ஞானமுடையதாகட்டும்.
மக்களின் மகிழ்ச்சியால்
மனதில் குதூகலம் பிறக்கட்டும்.
நா.தீபாசரவணன் உதவிப்பேராசிரியர் ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி,கோவை.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “போகி, பொங்கல் (கவிதை)”