நவம்பர் 27, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

போக்குவரத்து தொழிற்சங்கங்கள்: திட்டமிட்டபடி 15ம் தேதி முதல் வேலைநிறுத்தம்May 11, 2017

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் 2.43 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இந்த ஊழியர்களுக்கும் மற்றும் ஓய்வூதியர்களுக்குமான ஊதியத்தொகை நிலுவையில் உள்ளது.

Siragu buses-strike

மேலும் 2016 செப்டம்பர் முதல் அமலாக வேண்டிய 13- வது ஊதிய ஒப்பந்தம் குறித்தும் இன்னும் பேச்சுவார்த்தை முடியவில்லை என்பதாலும் வரும் 15ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்து இருந்தது.

இந்த வேலைநிறுத்தம் குறித்து நான்காம் கட்ட பேச்சுவார்த்தை இன்று காலை 10 மணிக்கு சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையில் அரசு ஒதுக்குவதாக இருந்த ரூ.750 கோடி போதாது என்பதால் திட்டமிட்டபடி 15ம் தேதி முதல் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது.

போக்குவரத்துத்துறைக்கு ஏற்பட்டு வரும் இழப்பிற்கு அரசே காரணம் என்றும், ரூ. 7000 கோடியை போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் இப்பேச்சுவார்த்தையில் தெரிவித்தது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “போக்குவரத்து தொழிற்சங்கங்கள்: திட்டமிட்டபடி 15ம் தேதி முதல் வேலைநிறுத்தம்”

அதிகம் படித்தது