சூன் 16, 2018 இதழ்
தமிழ் வார இதழ்

போராட்டத்துக்காக போடப்பட்ட கூடாரத்தை அகற்ற விவசாயிகளுக்கு டெல்லி போலிஸ் உத்தரவுApr 20, 2017

விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 37 நாட்களாக பெண்கள்உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில்போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Siragu-farmers5

தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தினமும் நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள் தமிழக விவசாயிகள்.

ஒருமாதமாக போராட்டம் நடத்தும் சக விவசாயிகளின் மன நிலையை அறிய அய்யாக்கண்ணுகருத்து கேட்டார். சக விவசாயிகளிடம் ஆலோசனை நடத்திய பின் மத்திய இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்துப் பேசினார் அய்யாக்கண்ணு.

ஏப்ரல் 22க்குள் அமைச்சரிடமிருந்து உறுதிமொழி கடிதம் கிடைத்தால் போராட்டத்தைவாபஸ் பெறுவதாகவும், இல்லையென்றால் எங்களது போராட்டம் தீவிரமடையும் என்றும்அமைச்சர் சந்திப்பிற்குப் பின் அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்திற்காகப் போடப்பட்ட கூடாரத்தை அகற்ற வேண்டும் என்று தமிழக விவசாயிகளுக்கு உத்தரவிட்டுள்ளது டெல்லி காவல்துறை. விவசாயிகளை அங்கிருந்து விரட்டுவதற்காக மத்திய ரிசர்வ் படை போலீசார் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் விவசாயிகள் செய்வதறியாது ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “போராட்டத்துக்காக போடப்பட்ட கூடாரத்தை அகற்ற விவசாயிகளுக்கு டெல்லி போலிஸ் உத்தரவு”

அதிகம் படித்தது