மணம் (கவிதை)
முனைவர் ஆ.சந்திரன்Jul 30, 2022
செவிமடல்களில் எதிரொலிக்கும் விசும்பல்
நாணழிந்து இதழ்களின் நீங்கி
பெருவெளியில் உலாச் செல்லும்
முகமழிவின் ரேகைகள் முற்றுப்புள்ளியாய் எஞ்சி நிற்க
முந்திச் செல்லும் சந்திகளின் கூடல்கள் சைகைசெய்யும்
வினைச் சேர்க்கையின் விபரீதவிளையாட்டில் விரும்பித் திரியும்
கணம்கொள் மகரந்தத்துகள் காலுதரிப் பறக்க
ஜனனத்தின் விழிகளில் எதையோ தேடிக்கொண்டிருக்க
நேற்றும் நளையும் கைக்குளுக்கிப் பூத்திருக்க
இருப்புக்கொண்ட கீரல்களின் ஓடு பாதையில்
மெல்ல அடியெடுத்து வைக்கிறதாம் ஆரம்பம்!
வேங்கையின் மலர்களைச் சுற்றிப் படர்ந்த
முள்வேளிக்குத் தடபுடலாய் மஞ்சள் நீராட்டு!
புத்தாடையைத் தன்வயப்படுத்தி மருள்கிறது
கங்குல் சிறகுகள்
நீரோடையில் மலர்ந்த மகிழம் பூவின் முன்னிலையில்
பிணவரையின் நிழலில் கண்ணியருக்கு இரகசிய கண்ணாலம்!
வானில் எதிரொலித்த கழுதைகளின் கனைப்பொலியில்
தெருவெங்கும் பெருக்கெடுத்தது மழைவெள்ளம்
நீச்சல் பழகியவர் வயிற்றில் நீண்டது வற்கடம்
வேடிக்கைப் பார்த்து ஓய்ந்து போய்
சமைந்து நின்ற மேகத்தின் பூரிப்பு
சல்லடையால் சலிக்கப்படுகின்றது!
நழுவிப் போனதை இருகப்பற்றுவதில்
முளைவிட்ட அதீத முனைப்பில்
கிழமைகளின் சிறகுகள் சேய்மிக்கின்றன!
முனைவர் ஆ.சந்திரன்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “மணம் (கவிதை)”