மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மணியங்குடி திருக்கோயில் வரலாறு

பா. கார்த்திக்

Oct 1, 2022

siragu maniyangudi1

‘கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம்’ என்பது பழமொழி. ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்பது முதுமொழி. தமிழகத்தில் உள்ள ஊர்கள்தோறும் சிறு சிறு கோயில்களாவது அமைந்திருக்கும். அந்தக் கோயில் மக்களிடம் அமைதி பக்தி,பண்பாடு, கட்டுப்பாடு போன்றவற்றை வளர்க்கும். கோயில் சார்ந்து பல தொழில்களும் நடைபெறும். கோயில் திருவிழாக்களில் சமுதாய ஒற்றுமை மேம்படும். இவ்வகையில் கோயில் என்பன சமுதாய நிலையங்களாக விளங்குகின்றன.

கோயில்களில் பெருந்தெய்வக் கோயில்கள், சிறுதெய்வக்கோயில்கள் என்று இருவகைப் பிரிவுகள் உண்டு. பெருந்தெய்வக் கோயில்கள் நல்லக் கட்டுமான அமைப்புடன் பெரிய அளவில் பொதுமக்கள் வழிபடும் நிலையில் அமையும். சிறுதெய்வக் கோயில்கள் என்பன ஒரு குழுவினருக்கு உரியதாக சிறய அளவில் கோயில் உள்ளதாக இருக்கும்.

“ஊர்க்காவல் தெய்வங்களாக ஆண், பெண் தெய்வங்கள் விளங்குகின்றன. பிடாரி அம்மன், மாரியம்மன் ஆகிய பெண்தெய்வங்களும் ஜயனார், கருப்பர், உள்ளிடட ஆண்தெய்வங்களும்,வாழ்வாங்கு வாழ்ந்து ஊர்நலனுக்காக உயிர் நீத்த இருபால்பட்ட தெய்வங்களும் இவ்வகையில் அமைகின்றன”,என்று ஆய்வாளர் சொல்லும் கருத்து சிறுதெய்வங்கள் தோன்றிய அடிப்படையைக் காட்டுவதாக உள்ளது.

இவ்வகையில் மணியங்குடி என்ற கிராமத்தில் காவல் தெய்வமாக ஸ்ரீ கருப்பசாமி விளங்குகிறார். அவருக்குத் திருக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இது தற்போது எழுப்பப்பெற்ற கோயிலாக இருந்தாலும், இக்கோயில் தெய்வமான கருப்பர், மக்களுக்கு நல்வாழ்வு அளிக்கும் தெய்வமாக விளங்கி வருகிறார். இக்கோயிலின், வரலாற்றை ஆராய்வதாக இவ்வியல் அமைகிறது.

மணியங்குடி ஊர் அறிமுகம்

தமிழகத்தில் உள்ள முப்பத்தெட்டு மாவட்டங்களில், சிறந்த மாவட்டமாக விளங்குவது சிவகங்கை மாவட்டம் ஆகும். இம்மாவட்டம் வரலாற்றுச் சிறப்பும், விடுதலைப் போராட்ட காலத்தில் விடுதலைக்காக வீரம் விளைந்த நிலமாகவும் விளங்கியது. இம்மாவட்டத்தில் வீரமங்கை வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் போன்ற பலர் இந்திய விடுதலைக்காக ஆங்கிலேயரை எதி;ர்த்துப் போர் செய்து தங்கள் இன்னுயிரைத் தந்தனர்.

இம்மாவட்டம் நிர்வாக அடிப்படையில்

 • சிவகங்கை
 • மானாமதுரை
 • இளையான்குடி
 • காளையார்கோயில்
 • திருப்புவனம்
 • தேவகோட்டை
 • சாக்கோட்டை
 • கல்லல்
 • எஸ். புதூர்
 • திருப்பத்தூர்
 • சிங்கம்புணரி

ஆகிய பன்னிரண்டு வட்டங்களை உள்ளடக்கியதாகும். இதனுள் நானூற்று நாற்பத்தைந்து கிராம ஊராட்சிகள் உள்ளன.

இப்பன்னிரண்டு வட்டங்களுள் காளையார்,வட்;டம் ஆன்மீகச் சிறப்பும், வரலாற்றுச் சிறப்பும்,உடையதாகும். காளையார் கோயிலில் மருதுபாண்டியர் கட்டிய பெரிய கோயில் அமைந்துள்ளது. இவ்வட்டம்

 1. காளையார் கோயில்
 2. மறவ மங்களம்
 3. நாட்டரசன்கோட்டை
 4. மல்லல்
 5. சிலுக்கப்பட்டி

ஆகிய ஐந்து உள் வட்டங்களை உடையது ஆகும். இவ்வுள் வட்டங்களில் அறுபத்து மூன்று வருவாய் கிராமங்கள் உள்ளன.

மே;ற்காட்டிய உள்வட்டங்களுள் ஒன்றான காளையார்கோயில் உள்வட்டத்தில் மணியங்குடி என்ற கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமம் மரகாத்தூர் பஞ்சாயத்தை சேர்ந்தது ஆகும். இக்கிராமத்தைச் சுற்றிப் பத்து, கிராமங்கள், அமைந்துள்ளன. அவை

 1. உருவாட்டி
 2. கொங்கங்திடல்
 3. சிறுவேளங்குடி
 4. பெறுவேளங்குடி
 5. மரகாத்தூர்
 6. மாரத்தூர்
 7. புளிய10ரணி
 8. நெடுவதாவு
 9. மேலவாய் கோட்டை
 10. சிலுக்கப்பட்டி

என்பனவாகும்.

ஊர் அமைவிடம்:

மணியங்குடி கிராமம் மதுரையிலிருந்து தொண்டி செல்லும் நெடுஞ்சாலையின் உட்புறப்பகுதியில் அமைந்துள்ளது. அதாவது இச்சாலையின் இடையில் வரும், புளியடிதம்மம் என்னும் ஊரின் தெற்குப் பக்கமாக மணியங்குடி அமைந்துள்ளது. புளியடித்தம்பம் என்ற கிராமத்திலிருந்து, தெற்குப் பக்கம் நோக்கிச் செல்லும் சாலையில்,ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஊர் மணியங்குடி ஆகும்.

மக்கள் தொகை

இவ்வூரில் மொத்தம் முப்பது வீடுகள் உள்ளன. இவற்றில் பத்துவீடுகள் காரை வீடுகளாகும். மீதம் உள்ள முப்பது வீடுகள் ஓட்டு வீடுகள் ஆகும். இவ்வ10ரின் மக்கள் எண்ணிக்கை தொன்னூறு என்ற அளவினதாகும்.

கிராமத்தில் உள்ள வசதிகள்

இந்த கிராமத்தில் பால்வாடி ஒன்று உள்ளது. இதில் சிறு குழந்தைகள் ஊட்டச் சத்து பெறுகிறார்கள். வாழ்க்கை முறையைச் சிறு குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள்.

இவ்வூருக்கு சிறு பேருந்துகள் வந்து செல்கின்றன. அவற்றையே இவ்வூர் மக்கள் போக்குவரத்திற்காக நம்பியுள்ளனர். இப்பேருந்துகள் ஊருக்குள் மூன்றுமுறை வந்து செல்கின்றன.

ஸ்ரீ வாழ்வளிக்கும் கருப்பசாமி கோயில்

இவ்வூரில் கோயில் இல்லை என்ற குறையைத் தற்போது எழுந்துள்ள ஸ்ரீ வாழ்வளிக்கும் கருப்பசாமி கோயில் நீக்கியுள்ளது. இது பூசாரி பாண்டி என்பவர் தன் முயற்சியால், அருள் பெற்று இவ்வாலயத்தை எழுப்பியுள்ளார். இக்கோயிலில் குறி சொல்லும் முறைமையும் உள்ளது.

கோயில் உருவான வரலாறு

இக்கோயில் மாளிகைப்பாறையில் அமைந்துள்ள அருள்மிகு கருப்பசாமியை முன்வைத்துக் கட்டப்பெற்றுள்ளது. இதன் வரலாற்றை அறிந்து கொள்ளுமுன் கருப்பசாமி என்ற தெய்வத்தின் வரலாற்றையும், மாளிகைப்பாறை கருப்பசாமி தெய்வம் பற்றிய வரலாற்றையும் தெரிந்து,கொள்ள வேண்டியது அவசியமாகும்.

கருப்பசாமி வரலாறு

நாட்டுப்புறத் தெய்வங்களுள் சக்தியும், சத்தியமும், வீரமும், காவல் தன்மையும் கொண்ட தெய்வமாக கருப்பசாமி விளங்கிவருகின்றது. இத்தெய்வத்தின் வரலாறு இராமாயண காலத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது.

இராமருக்கு அயோத்தியில் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. இருப்பினும் சீதையும் இராமனும் பிரியவேண்ய நிலை வருகிறது. சீதை பிரிந்து காட்டில் தனியே வாழ்கிறாள். இவளை வால்மீகி முனிவர் பாதுகாத்து வருகிறார்.

சீதைக்கு லவன் என்ற மகன் பிறக்கிறான். லவனும் சீதையும் நன்றாக வாழ்ந்து வருகின்றனர். ஒருமுறை சீதை லவனை தான் தங்கியிருக்கும் இடத்தில் இருந்து வேறு ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்று சோறு ஊட்டிக் கொண்டு இருக்கிறாள்.

அந்நேரத்தில் வால்மீகி முனிவர் சீதை தங்கியிருக்கும் வீட்டிற்கு வருகிறார். வந்தால் லவனைக் காணவில்லை. லவன் சீதையுடன் இருப்பதை அறியாத வால்மீகி முனிவர் பதறுகிறார்.

சீதை மிகுந்த மனவேதனையில் இருக்கிறாள். இப்போது லவனையும் இழந்தால் அவளால் அந்தத் துயரத்தைத் தாங்க இயலாது என்று எண்ணி தர்ப்பைப் புல்லிற்குச் சக்தி அளித்து அதனை லவனைப் போன்ற வடிவத்துடன் அமைந்த குழந்தையாக உருவாக்குகிறார்.

சோறூட்டி முடித்து வந்த சீதை லவனைப் போல இன்னொரு பிள்ளை இருப்பதைப் பார்த்து ஆச்சர்யமடைகிறாள். வால்மீகி முனிவரிடம் கேட்டபோது அவர் இதுவும் உன் பிள்ளைதான் இவன் பெயர் குசன் என்கிறார்.

குழந்தைகள் இருவரும் வளர்ந்து வருகிறார்கள். கல்வியிலும், வீரத்திலும் இருவரும் ஒத்து சிறந்து விளங்கிவருகிறார்கள். இராம கதையை இருவரும் சொன்னால் கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்ற அளவிற்கு மிகச் சிறப்பாக அவர்கள் சொல்லாற்றலும் இசையாற்றலும் பெற்று விளங்கினர்.

இந்நிலையில் இருவரும் இராமபிரானின் அசுமேத யாகத்திற்காக உலகம் சுற்றிவரச் செய்யப்பட்ட குதிரையைத் தடுத்து நிறுத்துகின்றனர். அப்போது இலக்குவன் யார் தடுத்து நிறுத்தியது என்று கேட்டு இவர்களுடன் போர் செய்ய வருகிறான். ஆனால் இலக்குவனின் வீரம் இவர்களிடத்தில் அவருக்கு வெற்றியைத் தரவில்லை. அவர் தோற்றுப் போகிறார். படைகளும் தோற்று ஓடுகின்றன.

அப்போது இராமர் இவர்களை எதிர் கொள்ள வருகிறார். அப்போது இக்குழந்தைகள் இராமகதையைச் சொல்ல அவர் இவர்களைத் தழுவி மகிழ்கிறார். இதன்பின் சீதாபிராட்டியை ஏற்றுக் கொள்ளச் சம்மதிக்கிறார்.

இருப்பினும் மீண்டும் சீதையை, லவனை, குசனை நெருப்பில் மூழ்கச் செய்கிறார். சீதையும் லவனும் பொன்னிறமாகவே இருக்க குசன் தீயில் கருகி கருப்பு நிறம் பெறுகிறான்.

இக்கருப்பு குசனே கருப்பசாமி என்று வாய்மொழிக் கதை விளங்கிவருகின்றது. இவ்வாறு கருப்பசாமி உருவான வரலாற்றை அறிந்து கொள்ளமுடிகின்றது.

அழகர் கோயிலில் பதினெட்டாம்படிக் கருப்பர் உள்ளார். அழகர் கோயிலின் உள்பகுதியில் இராமரின் வடிவமான பெருமாள் நிற்க காவல் தெய்வமாக கருப்பர் இருப்பது மேற்சொன்ன வாய்மொழிக்கதையின் சாயல் இருப்பதை உணரஇயலும்.

கிராமங்களில் பெரிய கருப்பர், சின்ன கருப்பர் என்று இரு தெய்வங்கள் வணங்கப்படுகின்றனர். இவர்கள் லவன், குசன் என்பவர்களின் மாற்று உருவங்களாகவும் கொள்ளலாம்.

கருப்பரின் வடிவம்

குசன் என்ற நிலையில் அமைந்த கருப்பர் கரிய நிறத்தவர். இவர் நின்றும் குதிரையில் அமர்ந்தும் காட்சி தருகிறார். பெரிய தலைப்பாகை, நெற்றியில் திருநாமம், முறுக்கிய மீசை, கையில் ஓங்கிய வீச்சரிவாள், மற்றொரு கையில் குதிரையை நடத்தும் கயிறு, அல்லது கதை போன்றன கொண்ட வடிவத்தில் இவர் விளங்குகிறார். இடுப்பில் கச்சை அணிந்து உருட்டிய விழிகளுடன் துடிக்கும் இதழ்களுடன் இவரின் காட்சி காண்பதற்கு அச்சம் ஊட்டும் வகையில் உள்ளது.

கருப்பசாமியின் குடும்பம்

கருப்பசாமி தனித்தெய்வமாக அறியப்பெற்றாலும் அவருக்கென்று குடும்பம் ஒன்று உள்ளதாகவும் செவிவழிக் கதைகள் சுட்டுகின்றன. கருப்பன், கருப்பசாமியின் மனைவி கருப்பழகி (கருப்பாயி) என்பவராவார். அவரின் மகன் கண்டன் ஆவான். அவரின் அண்ணன் – மூத்த கருப்பசாமி அல்லது பெரிய கருப்பர் என்பவராவார். இவரின், தம்பி இளைய கருப்பர் ஆவார். இவரின் தங்கை ராக்காயி ஆவார். இவ்வாறு கருப்பசாமிக்கு குடும்பம் ஒன்று இருப்பதாக மக்கள் எண்ணிவருகின்றனர்.

தமிழகத்தின் புகழ் பெற்ற கருப்பர் தெய்வங்கள்

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் குறிப்பாக இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் அனைத்துக் கோயில்களிலும் காவல்தெய்வமாக கருப்பசாமி வீற்றிருப்பார். இன்னும் குறிப்பாக

 • சிறுவனூர் (பெரியகருப்பு, சின்னக்கருப்பு)
 • மார்நாடு கருப்பசாமி (சின்னப்பேராலி, விருதுநகர் )
 • பதினெட்டாம்படியன் (மதுரை அழகர் கோயிலில் உள்ள கருப்பசாமி சன்னதிக்கு பதினெட்டு படிகள் இருப்பதால்)
 • சின்ன கருப்பசாமி
 • மலையாளம் சுவாமி
 • பெரிய கருப்பசாமி
 • மளுவேந்தி கருப்பணசாமி
 • மீனமலை கருப்பசாமி
 • முன்னோடை கருப்பசாமி
 • நொண்டி கருப்பசாமி
 • ஒண்டி கருப்பசாமி
 • கொம்படி கருப்பண்ணசாமி (வாடிப்பட்டி கருப்பசாமி)
 • கோட்டை வாசல் கருப்பசாமி
 • அச்சன்கோயில்,கருப்பசாமி.
 • மடை கருப்பசாமி
 • ஆகாச கருப்பு
 • தலத்துக் கருப்பசாமி.(மேலநம்பிபுரம், விளாத்திகுளம், தூத்துக்குடி மாவட்டம்)
 • பெரிய ஆலங்குளம் சந்தனக்கருப்பசாமி
 • வில்வமரத்து கருப்பராயம் சுவாமி,நம்பியூர்,ஈரோடு மாவட்டம்,
 • பொந்துபுளி கருப்பசாமி,மதுரை மாவட்டம்
 • வண்ண கருப்பசாமி,விருப்பாச்சி
 • ஸ்ரீ சோனைகருப்பசாமி மதுரை மாவட்டம்
 • கோட்டைமலை கருப்பசாமி புளியங்குடி தென்காசி மாவட்டம்
 • கிளிக்கூண்டு கருப்பசாமி வானரமுட்டி தூத்துக்குடி மாவட்டம்
 • விநாயகபுரம் கருப்பசாமி சித்தர்பீடம் கடலூர்.
 • ஆவியூர் மார்நாட்டு கருப்பசாமி
 • ஆவியூர் நொன்டிகருப்பசாமி முத்துகருப்பசாமி
 • ஆவியூர் ரெட்டகருப்பசாமி
 • மாங்குளம் மார்நாடு கருப்பசாமி

என்று பல ஊர்களில் உள்ள கருப்பசாமி தெய்வங்கள் மக்களின் பெருநம்பிக்கை பெற்றனவாகும்.

கருப்பரின் பல பெயர்கள்

கருப்பர் பல வடிவங்களில் பல பெயர்களில் வணங்கப்பெற்று வருகிறார். நொண்டிக் கருப்பர் என்பவர் ஒருகால் சற்று குறைபட்ட நிலையில் அமைந்துள்ளார். சங்கிலிக் கருப்பர் சங்கிலியால் அவரின் வீரம், கோபம் கட்டப்பட்ட நிலையில் வணங்கப்பெறுகிறார். இவ்வாறு பல வடிவங்கள் பல பெயர்களில் கருப்பசாமி வணங்கப்பெறுகிறார்.

 • கருப்பண்ணசாமி
 • முன்னோடி கருப்பசாமி
 • பெரிய கருப்பசாமி
 • சின்ன கருப்பசாமி
 • சந்தனக் கருப்பசாமி
 • முப்புலிக் கருப்பசாமி
 • வாழ்வளிக்கும் கருப்பசாமி
 • ஆகாய கருப்பசாமி
 • பதினெட்டாம்;படி கருப்பசாமி
 • நொண்டிக் கருப்பசாமி
 • சோனைக் கருப்பசாமி
 • கோட்டைக் கருப்பசாமி

என்ற பெயர்களில் கருப்பர் மக்களால் வணங்கப்பெற்று வரப்பெறுகிறார்.

இதனோடு நூற்றியெட்டு என்ற எண்ணிக்கையில் கருப்பசாமி பெயர்கள் அறியப்பெறுகின்றன.

 1. .கருப்பண்ணசாமி
 2. முன்னோடி கருப்பசாமி
 3. பெரிய கருப்பசாமி
 4. சின்ன கருப்பசாமி
 5. சந்தனக் கருப்பசாமி
 6. முப்புலிகருப்பசாமி
 7. மாசாணகருப்பசாமி
 8. ஆகாய கருப்பசாமி
 9. பதினெட்டாம்படி கருப்பசாமி
 10. பாரி கருப்பசாமி
 11. பிலாவடி கருப்பசாமி
 12. முத்து கருப்பசாமி
 13. உத்திர கருப்பசாமி
 14. ஒண்டி கருப்பசாமி
 15. நொண்டி கருப்பசாமி
 16. சப்பாணி கருப்பசாமி
 17. சோனை கருப்பசாமி
 18. கரந்தமலை கருப்பசாமி
 19. சமைய கருப்பசாமி
 20. கோட்டை கருப்பசாமி
 21. வேட்டை கருப்பசாமி
 22. கனவாய் கருப்பசாமி
 23. மாரநாட்டு கருப்பசாமி
 24. சங்கிலி கருப்பசாமி
 25. புனுகு கருப்பசாமி
 26. மாட கருப்பசாமி
 27. ஆண்டி கருப்பசாமி
 28. மாரடி கருப்பசாமி
 29. தேரடி கருப்பசாமி
 30. வீரடி கருப்பசாமி
 31. பேய் கருப்பசாமி
 32. மலையாள கருப்பசாமி
 33. கரையடி கருப்பசாமி
 34. சிங்க கருப்பசாமி
 35. காங்கேயம் கருப்பசாமி
 36. பொட்டல் கருப்பசாமி
 37. பூமாலை கருப்பசாமி
 38. பூதநாயகா கருப்பசாமி
 39. வெள்ளை கருப்பசாமி
 40. தாணிப்பாறை கருப்பசாமி
 41. பாறை கருப்பசாமி
 42. மாயாண்டி கருப்பசாமி
 43. மடபுரம் கருப்பசாமி
 44. எல்லை கருப்பசாமி
 45. வாழையடி கருப்பசாமி
 46. நாட்டுக்கோட்டை கருப்பசாமி
 47. நல்லண்ண கருப்பசாமி
 48. சடைமுடி கருப்பசாமி
 49. அடைகாக்கும் கருப்பசாமி
 50. தேனருவி கருப்பசாமி
 51. வல்லைய கருப்பசாமி
 52. பணங்காட்டு கருப்பசாமி
 53. அருவிகரை கருப்பசாமி
 54. பச்சை மலை கருப்பசாமி
 55. ஆணைமலை கருப்பசாமி
 56. மஞ்சமலை கருப்பசாமி
 57. பாதள கருப்பசாமி
 58. ஓம் கார கருப்பசாமி
 59. மாங்காடு கருப்பசாமி
 60. உரிமடத்துயடி கருப்பசாமி
 61. கருமாத்தூர் கருப்பசாமி
 62. கச்சை கருப்பசாமி
 63. சண்ட பிரசண்ட கருப்பசாமி
 64. வளையங்குளம் கருப்பசாமி
 65. காட்டு கருப்பசாமி
 66. அன்பு கருப்பசாமி
 67. வல்லடி கருப்பசாமி
 68. கன்னிமார் காவல் கருப்பசாமி
 69. மலையடி கருப்பசாமி
 70. அமுத கருப்பசாமி
 71. அழகு கருப்பசாமி
 72. ஆங்கார கருப்பசாமி
 73. வேலங்குடி கருப்பசாமி
 74. சாம்பிராணி கருப்பசாமி
 75. ஒண்டிபுலி கருப்பசாமி
 76. அழகுமுத்து கருப்பசாமி
 77. அழங்கார கருப்பசாமி
 78. வேப்படி கருப்பசாமி
 79. மேலமடை கருப்பசாமி
 80. தோப்பு கருப்பசாமி
 81. குடல் வெட்டி கருப்பசாமி
 82. வல்லநாட்டு கருப்பசாமி
 83. வள்ளக்காட்டு கருப்பசாமி
 84. வழிவிடும் கருப்பசாமி
 85. வட்டமலை கருப்பசாமி
 86. வானரமுட்டி கருப்பசாமி
 87. பனையடி கருப்பசாமி
 88. கிளிகூண்டு கருப்பசாமி
 89. கிராம கருப்பசாமி
 90. ரணவீரன் கருப்பசாமி
 91. ஈசாண கருப்பசாமி
 92. மச்சை கருப்பசாமி
 93. கருங்காலி கருப்புசாமி
 94. பால கருப்பசாமி
 95. சு10ர கருப்பசாமி
 96. பேயாண்டி விளையாட்டு கருப்பசாமி
 97. அகோர கருப்பசாமி
 98. பாலையத்து கருப்பசாமி
 99. மஞ்சன கருப்பசாமி
 100. கொக்கு வெட்டி கருப்பசாமி
 101. மளுவேந்தி கருப்பசாமி
 102. குருவிகுளம் கருப்பசாமி
 103. வன்னிகருப்பண்ணசாமி
 104. மீனமலை கருப்பசாமி
 105. முன்னோடை கருப்பசாமி
 106. கொம்படி கருப்பசாமி
 107. கொல்லிமலை கருப்பசாமி
 108. சிவன் மலை கருப்பசாமி.

என்று நூற்றியெட்டு வடிவங்களாக கருப்பசாமி வணங்கப்படுகிறார்.


பா. கார்த்திக்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மணியங்குடி திருக்கோயில் வரலாறு”

அதிகம் படித்தது