மே 14, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

மதுக்கடைக்கு எதிராகப் போராடும் பெண்கள்May 17, 2017

தேசியமற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள் உள்ள மதுக்கடைகளை மூடும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால் ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் உள்ள 3500 மதுக்கடைகள் மூடப்பட்டது.

Siragu tasmac

மதுக்கடைகள் மூலமாக அதிகமாக வருமானம் ஈட்டிய தமிழக அரசு, நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுக்கடைகளை கிராமத்தில் திறப்பதற்கு ஏற்பாடு செய்தது. ஆனால் கிராமத்தில் மதுக்கடைகளைத் திறப்பதற்கு ஆங்காங்கே எதிர்ப்புகள் கிளம்பியது. இதற்காக பெண்கள் உட்பட பொதுமக்கள் போராட்டம் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.

பெண்களே மதுக்கடைகளை சூறையாடி வருகிறார்கள். அவ்வகையில் இன்று விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மதுக்கடை, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கட்டினப்பள்ளியில் உள்ள மதுக்கடை, அரியலூர் மாவட்டம் செந்துறை அருகில் உள்ள ஈச்சங்காட்டில் உள்ள மதுக்கடை போன்றவற்றை பெண்கள் சூறையாடி வருகிறார்கள்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மதுக்கடைக்கு எதிராகப் போராடும் பெண்கள்”

அதிகம் படித்தது