மதுக்கடைக்கு எதிராக போராட்டம்
May 19, 2017
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள் உள்ள மதுக்கடைகளை மூடும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால் ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் உள்ள 3500 மதுக்கடைகள் மூடப்பட்டது.
மதுக்கடைகள் மூலமாக அதிகமாக வருமானம் ஈட்டிய தமிழக அரசு, நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுக்கடைகளை கிராமத்தில் திறப்பதற்கு ஏற்பாடு செய்தது. ஆனால் கிராமத்தில் மதுக்கடைகளைத் திறப்பதற்கு ஆங்காங்கே எதிர்ப்புகள் கிளம்பியது. இதற்காக பெண்கள் உட்பட பொதுமக்கள் போராட்டம் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.
மதுக்கடைக்கு எதிராக போரிடுவோரை கைது செய்யக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மதுக்கடையை அகற்றக்கோரி வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள அழிஞ்சிக்குப்பத்தில் போராட்டம் நடைபெற்றது. போலீசார் பேச்சுவாரத்தை நடத்தியும் கலைந்து செல்லவில்லை போராட்டக்காரர்கள்.
எனவே போலீசார் மற்றும் போராட்டக்காரர்களிடையே வாக்குவாதம் நடைபெற்றது. இதில் இரண்டு லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் நொறுக்கப்பட்டன. தீ வைப்பு மற்றும் அரசு வாகனங்கள் மீது தாக்குதல் நடந்ததையடுத்து போலீசார் தடியடி நடத்தி போராட்டத்தைக் கலைத்தனர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “மதுக்கடைக்கு எதிராக போராட்டம்”