அக்டோபர் 1, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

மதுரை உயர்நீதிமன்ற கிளை: தமிழக அரசு மருத்துவமனையில் மருந்தகங்களை கணினி மயமாக்க வேண்டும்Feb 25, 2017

தமிழகத்தில் 32 அரசு மருத்துவமனைகள், 20 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், 240 தாலுகா மருந்தகங்கள் உள்ளன. தமிழ்நாடு முழுவதிலும் அரசு மருத்துவமனைகளில் 20 லட்சம் உள் நோயாளிகளும், 50 லட்சம் வெளி நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Siragu hospital

தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் சார்பில் இந்நோயாளிகளுக்கு மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஏழு சிகிச்சை பிரிவுகளும் ஏழு மருந்தகங்களும் உள்ளன. இங்கு தேவையான மருந்துகள் 2016 அக்டோபர் மாதம் முதல் வழங்கப்படுவதில்லை. எனவே தேவையான மருந்துகளை கையிருப்பு வைக்கவும், மருந்தகங்களை கணினிமயமாக்க வேண்டும். மேலும் அரசு மருத்துவமனையில் உள்ள காளியிடங்களை நிரப்ப வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த ஆனந்த ராஜ் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இவ்வழக்கின் விசாரணையில் மருந்தகங்களை கணினி மயமாக்கப்பட வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், தேவையான மருந்துகளை இருப்பு வைக்க வேண்டும் என்றும், மேலும் இந்த உத்தரவை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மதுரை உயர்நீதிமன்ற கிளை: தமிழக அரசு மருத்துவமனையில் மருந்தகங்களை கணினி மயமாக்க வேண்டும்”

அதிகம் படித்தது