ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

மத்திய அமைச்சரவைக் குழு: வறட்சி பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவிக்கப்பட்ட கர்நாடகாவுக்கு நிதி ஒதுக்கீடுJan 5, 2017

கர்நாடகாவில் பருவமழை பொய்த்ததால் நாற்பது வருடத்தில் இல்லாத அளவிற்கு வறட்சி ஏற்பட்டுள்ளது, இதனால் அணைகளில் போதிய தண்ணீர் இல்லை, விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று கர்நாடக அரசு கூறியுள்ளது.

siragu-karnataka-farmer

கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சி குழுவினரும் டெல்லி சென்று பிரதமர் மோடியிடம் கர்நாடகாவிற்கு ரூ.4702 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மத்திய குழு கர்நாடகா விரைந்து ஆய்வு மேற்கொண்டு மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது.

இதையடுத்து கடந்த அக்டோபர் 19ம் தேதி கர்நாடக அரசை வறட்சி மாநிலமாக அறிவித்தது மத்திய அரசு. கர்நாடக மாநிலத்தில் 176 தாலுக்காக்களில் 139 தாலுக்காக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டவை என்றும் அறிவித்தது.

மேலும் கர்நாடகாவிற்கு ரூ. 1782.44 கோடி நிதி ஒதுக்குவது என்று ராஜ்நாத் தலைமையில் மத்திய அமைச்சரவை குழு முடிவு செய்துள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மத்திய அமைச்சரவைக் குழு: வறட்சி பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவிக்கப்பட்ட கர்நாடகாவுக்கு நிதி ஒதுக்கீடு”

அதிகம் படித்தது